அவரை ஒரு கூட்டத்துக்கு பேச அழைத்தால் குறைந்தபட்சமாக 1.5 லட்ச ரூபாயிலிருந்து 2 லட்ச ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இருப்பவர்களிடம் போய் கேட்டால் கூட பரவாயில்லை. ‘தம்பி விஜய் ஆட்டோ ஓட்டுபவரையும் சைக்கிள் கடை வைத்திருப்பவரையுமென எளிய பிள்ளைகளை வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கிறார்’ என்று பேசுகிறார். அந்த எளிய பிள்ளைகள் அரசியல் மாற்றத்துக்காக தெருவில் நிற்கும் போது லட்சத்தில் பேரம் பேசுவது அறமா? எங்களால் இயன்ற தொகையையும் அவருக்கான வசதியையும் மகிழ்ச்சியாக அளிக்க தயாராக இருக்கிறோம். ஆனால், அவரோ உதவியாளருக்கும் சேர்த்து நம் தலையில் பில்லை கட்டுகிறார்’ எனக் குமுறுகின்றனர்.
மேலும் பேசியவர்கள், ‘இவ்வளவையும் செய்தாலும் டைமரை ஓடவிட்டு பேசுவதை போல அளந்துதான் பேசுகிறார். மேடை என்றால் 40-45 நிமிடம். பிரசார வாகனம் என்றால் ஒரு பாய்ண்ட்டுக்கு 10 நிமிடம். எல்லா இடத்திலும் பேசிய பொருளையே மீண்டும் மீண்டும் பேசுகிறார். ‘சிவாஜி ஓட்டையே கள்ள ஓட்டா போட்ட கும்பல் இது’ என ஒரே கதையை எல்லா இடத்திலும் வசனம் மாறாமல் ஒப்பிக்கிறார். கேட்கிற மக்களுக்கு எந்த சுவாரஸ்யமும் இல்லை’ என வேதனைப்படுகின்றனர்.
கட்சி சார்பில் பரப்புரைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் நாஞ்சில் சம்பத். பரப்புரையில் ஈடுபட வேண்டியது அவரது பொறுப்பு. அதற்கு இத்தனை கறாராக பில் போடுவது என்ன நியாயம்? என்கின்றனர் நிர்வாகிகள். தலைமை தலையிட்டு இந்த பேமண்ட் விவகாரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டுமென நிர்வாகிகள் விரும்புகின்றனர்.
இதுசம்பந்தமாக நாஞ்சில் சம்பந்திடம் விளக்கம் கேட்க தொடர்புகொண்டோம். ‘மாலை 4.30 க்கு மேல் அழையுங்கள்’ என அவர் தரப்பில் கூறப்பட்டது. நாமும் பின்னர் அழைத்து பார்த்தோம், அழைப்பை ஏற்கவில்லை. நாஞ்சில் சம்பத் தரப்பில் உரிய விளக்கம் கொடுத்தால் பரிசீலித்து அதையும் வெளியிடுவோம்.