ஓமம் (Trachyspermum ammi L.), Apiaceae குடும்பத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய மருத்துவ மூலிகை. இது இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைத் தாயகமாகக் கொண்ட ஒரு பழைமையான மருத்துவ மற்றும் நறுமணத் தாவரம். பழங்காலத்தில் வணிகப்பாதைகள் வழியாக ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஓமம் பரவியது.
இன்று, இந்தியா உலகின் மிகப்பெரிய ஓமம் உற்பத்தியாளர்களில் ஒன்றாக விளங்குகிறது. குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இது அதிகளவில் பயிரிடப்படுகிறது. ஓமத்தின் இலைகள், என விதைகள் அனைத்துமே மருத்துவக் குணங்களைக் கொண்டவை. நவீன மருத்துவ ஆய்வுகளே ஊர்ஜி தப்படுத்தும் அளவிற்கு மருத்துவக் குணங்களைக் கொண்டது ஓமம்.
சித்த மருத்துவத்தில் ஓமம் சித்த நூல்களில் ஓமம் கார்ப்பு (காரம்) சுவை, உஷ்ண வீரியம், கடுவான விபாகம் கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இது முக்கியமாக வாதம் மற்றும் கபத்தைச் சமப்படுத்தி, செரிமான நெருப்பை (அக்னி) தூண்டி, உணவு செரிமானத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டதாகக் கருதப்படுகிறது. சித்த மருத்துவக் கோட்பாட்டின்படி, ஓமம் தீபனம் (பசியைத் தூண்டுதல்), பாசனம் (செரிமானத்தை மேம்படுத்துதல்), வாத-சுப சமனம், கிருமிநாசனம், சூலை நீக்கம், குடல்வாயு அகற்றுதல் போன்ற பல்வேறு மருத்துவச் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.
ஓமம் தனியாகவும், சூரணம், குடிநீர், தைலம் லேகியம் போன்ற பல்வேறு மருந்து வடிவங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. சித்த மருத்துவத்தில் இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் செரிமானக் கோளாறுகள், வயிற்று உப்புசம், வாயுத் தொல்லை, அஜீர ணம், வயிற்றுவலி, குடல் புழுக்கள், இருமல், சளி, ஆஸ்துமா, மூட்டு வலி போன்ற பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஓமத்தில் என்ன இருக்கிறது?
ஓமத்தில் மருத்துவச் செயல்பாடுகளுக்குக் காரணமான பல உயிர்ச்செயற்பாட்டு வேதியியல் மூலக்கூறுகள் அடங்கியுள்ளன. அவற்றில் முக்கியமானது தைமோல். இது ஓமத்தின் நறுமணத்திற்கும் மருத்துவச் செயல்பாடுகளுக்கும் பெரிதும் காரணமாகிறது. மேலும், கார்வாக்ரோல், பிசைமின், Vடெர்பீனீன், a பினென், Bபினென், லிமோனென், டெர்பினென் 4 ஓல், ẞகாரியோஃபிலின் போன்ற மோனோடெர்பின்கள் மற்றும் செஸ்கு விடெர்பின்களும் இதில் காணப்படுகின்றன.
கூடுதலாக, ஃபிளாவனாய்டுகள், ஃபீனாலிக் சேர்மங்கள், டானின்கள், சப்போனின்கள் மற்றும் பல்வேறு ஆன்டி ஆக்ஸிடன்ட் மூலக்கூறுகளும் ஓமத்தில் உள்ளன. இந்த வேதியியல் மூலக்கூறுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடே ஓமத்தின் பல்வேறு மருத்துவக் குணங்களுக்கு அடிப்படையாக அமைகிறது.
ஓமம் குறித்த ஆராய்ச்சிகள்
அறிவியல் ஆய்வுகள் ஓமத்தின் பல்வேறு மருந்தியல் செயல்பாடுகளை உறுதிப்படுத்தியுள்ளன. குறிப்பாக, தைமோல் மற்றும் கார்வக்ரால் ஆகியவை சக்திவாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பு செயல்பாட்டைக் கொண்டுள்ளன. இதன் மூலம், ஓமம் உணவு மூலம் பரவும் தொற்றுகள் மற்றும் சில குடல் சித்த மருத்துவத்தில் ஓமம் செரிமானக் கோளாறுகளுக்கான முதன்மை மூலிகைகளில் ஒன்றாக சேர்க்கப்படுகிறது.
வயிறு வலி குறைய
குடல் தசைகளின் பிடிப்பைக் குறைக்கும் வயிறு தசைகளின் தளர்வை அதிகரிக்கும் தன்மை ஓமத்திற்கு உள்ளது. இதன் காரண மாகவே வயிற்றுப்பிடிப்பு, வயிற்று வலி மற்றும் வாயுத் தொல்லையை இது குறைக்கிறது. இதன் வாயு நீக்கி செயல்பாடு குடலில் தேங்கும் வாயுவை வெளியேற்ற உதவுவதால், அஜீரணம் மற்றும் வயிற்று உப்புசம் போன்ற அறிகுறிகளில் இவை உதவுகிறது.
பசியின்மை குணமாக
‘குழந்தைகள் சாப்பிடுவதில்லை’ என புலம்பும் பெற்றோருக்கு ஓமம் அருமருந்து. வாரத்தில் இரண்டு முறை ஒரு டீஸ்பூன் அளவு ஓமத்தி நீர் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு பசி உணர்வு அதிகரிக்கும். பெரியவர்களும் கூட பசியின்மை, வயிறு மந்தம் போன்ற பிரச்னைகள் இருந்தால் ஓமத்தை வறுத்து, பொடி செய்து, அரை டம்ளர் வெந்நீரில் கால் டீஸ்பூன் அளவு கலந்து தொடர்ந்து பத்து நாட்களுக்கு குடித்து வந்தால் செரிமான மண்டலம் சீராகி பசி அதிகரிக்கும். இது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை அகற்றி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
சளியை இளக்க
இருமல், சளி, ஆஸ்துமா மற்றும் சுவாசத் தொற்றுகளில் அறிகுறிகளைக் கட்டுக்குள் வைக்க ஓமம் பாரம்பரியமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுவாச மண்டலத்தில் சுவாச பாதையை விரிவடையச் செய்யும் தன்மையும் ஓமத்துக்கு உண்டு. இது சுபம் நீக்கி செயல்பாடுகளைக் கொண்டிருப்பதால் சளியை இளக்கி வெளியேற்ற உதவுகிறது.
மூட்டுவலி பிரச்னைக்கு
ஆர்த்ரைட்டிஸ் எனும் மூட்டு வலி பிரச்னைகள் உள்ளவர்கள் ஓமம் தண்ணீரை குடித்துவந்தால் மூட்டு வலி அறிகுறிகள் கட்டுப்படும். ஓமத்தை ஒரு பருத்தி துணியில் பொட்டலம் கட்டி, தோசைக்கல் மீது வைத்து இளஞ்சூடாக இருக்கும்போது வலி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம். இதனால் வீக்கம் கட்டுப்படும். ஓமத்தை தண்ணீர்விட்டு அரைத்து பேஸ்ட் போல், மூட்டுகள் மீது பற்று போட, மூட்டு வலி குறைந்து நிவாரணம் கிடைக்கும்.
பல் வியாதிகள்
பல்வலி இருப்பவர்களுக்கு தற்காலிக தீர்வாக ஓமம் இருக்கும். இரண்டு டம்ளர் தண்ணீரில் சிறிது ஓமம், சிறிது கல் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். இளஞ்சூடாக இருக்கும்போது வாய் கொப்பளித்து வந்தால் பல் வலி, ஈறுகளில் இரத்தக் கசிவு கட்டுப்படும். இவை தற்காலிக தீர்வாக இருந்தாலும் வலி உணர்வை கட்டுப்படுத்தும்.
உடல் எடை நிர்வகிக்க
ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அருந்துவது பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும். அதேபோல், ஓமத்தைச் சேர்த்து சூப் அல்லது ரசம் தயாரித்து உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஓமத்தை உணவின் ஒரு பகுதியாக அளவோடு பயன்படுத்துவது ஆரோக்கியத்தை அதிகரிக்கும். பலகாரங்கள் செய்யும்போது ஓமத்தைப் பொடித்து சேர்த்தால் செரிமானம் மேம்படும். ஓம் விதைகளை நீரில் கொதிக்க வைத்து ஓம் தேநீராக குடிக்கலாம்.
ஓமம் ஒரு சமையல் நறுமணப் பொருளாக மட்டுமல்லாமல், பாரம்பரிய மருத்துவத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ள ஒரு மதிப்புமிக்க மூலிகையாகவும் விளங்குகிறது. ஓமத்தை உணவின் ஒரு பகுதியாக அளவோடு பயன்படுத்தி, ஆரோக்கியமான உணவு முறையுடன் வாழ்வோம்!
சித்தாவரம் தொடரும்

