கச்சா எண்ணெய் விலை சரிவு: பெட்ரோல், டீசல் விலை ஏன் குறையவில்லை? கார்கே கேள்வி|Crude Oil Halved, Fuel Prices High: Kharge Fires 3 Questions

Spread the love

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த பின்னும், இந்தியாவில் ஏன் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மத்திய அரசிடம் மூன்று கேள்விகளை அடுக்கியுள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் கேட்டுள்ள மூன்று கேள்விகள்…

“பாஜகவின் பகற்கொள்ளை மற்றும் பிக்பாக்கெட் அடிக்கும் குணம் –

கச்சா எண்ணெய் விலை பாதாளத்திற்குச் சரிந்து கொண்டிருக்கிறது,

இருந்தும் பெட்ரோல், டீசல், கேஸ் விலையைக் குறைத்து மக்களுக்கு நிம்மதி தருவதற்குப் பதிலாக…

மோடி அரசு மக்களின் சேமிப்பைப் பிழிந்தெடுப்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கிறது

எங்களது மூன்று கேள்விகள் –

1. மேற்கு ஆசியாவில் போர் உச்சத்தில் இருந்தபோது, கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு $138 டாலராக இருந்தது.

அப்போதே பெட்ரோல் ₹94.77-க்கும், டீசல் ₹87.67-க்கும் விற்கப்பட்டது.

இன்று கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு $70.71 டாலராகக் குறைந்துவிட்டது.

அப்படியிருந்தும் மோடி அரசு ஏன் இன்னும் பெட்ரோலை ₹102.12-க்கும், டீசலை ₹95.20-க்கும் விற்றுக் கொண்டிருக்கிறது?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *