8. உங்களுடைய வாழ்க்கைத் துணையைப் பற்றிக் குறிப்பிடும் 7-ம் இடத்துக்கு… அதாவது மகரத்துக்கு அதிபதியாக சனி வருவதால், திருமண வாழ்க்கை சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இருக்கும்.
9. உங்களுக்கு 8-ம் இடம் ஆயுள் ஸ்தானம் – கும்ப ராசி. இதற்கும் சனியே அதிபதி. ஆதலால், தீர்க்காயுள் உண்டு.
10. பெரிய பதவியிலும், வியாபாரத்திலும் சாதிக்க விரும்புவீர்கள். காவல்துறை, ராணுவம், கப்பல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஈடுபடுவீர்கள். சகோதரர்களின் மீது பாசம் உண்டு. ஆனால், உங்களால் மூத்த சகோதர சகோதரிகள் பலன் பெறுவார்களே தவிர, அவர்களால் உங்களுக்கு உதவிகள் கிடைக்காது.
11. கடக ராசிக்காரர்கள், பெரும்பாலும் பூர்வீகச் சொத்து கைக்கு வரும் அமைப்பு உள்ளவர்கள். கடும் உழைப்பாளிகள். இவர்களுக்கு 49 வயதுக்கு மேல் சொந்தவீடு அமையும் யோகம் வாய்க்கும்.
12. இவர்களின் ராசி அதிபதி சந்திரன் என்பதால் விரைவில் சொந்த வீடு அமைய, சந்திரனைத் தலையில் சூடியிருக்கும் சிவபெருமானை வழிபட வேண்டும். இவர்களின் வீடு கோயிலுக்கு அருகிலோ, கோயிலுக்குப் பின்புறத்திலோ இருந்தால் சிறப்பானதாக இருக்கும். இவர்கள் இருக்கும் வீட்டில் எப்போதும் தண்ணீர் பஞ்சம் ஏற்படாது.
13. இந்த ராசிக்கான அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள், பழுப்பு. அதிர்ஷ்ட பூக்கள்: பூக்களில் நந்தியாவட்டை. மருதாணிப்பூ, முல்லை போன்றவை கடக ராசிக்கு அதிர்ஷ்டம் தரும். இவர்களுக்கு மேற்கு திசை சிறப்பு தரும்.
14. நாள்-கிழமை எனில்… திங்கள் மற்றும் வியாழக் கிழமை அன்று புதிய காரியங்களை முன்னெடுத்தால் வெற்றி நிச்சயம். இந்தக் கிழமைகள் உங்களுக்கு மிகவும் யோகம் தருவதாக அமையும். 2, 11, 20 ஆகியவை அதிர்ஷ்ட தேதிகள். இந்தத் தேதிகளில் நீங்கள் ஈடுபடும் காரியங்களில் வெற்றி கைகூடும்.
15. கடக ராசிக்காரர்கள் ஆபரணங்களில் முத்து பயன்படுத்தலாம். நீர் நிலைகள் சார்ந்த தொழில்கள் இந்த ராசியினருக்கு நல்ல வருமானத்தைக் கொடுக்கும். சங்கு, மீன் தொடர்பான தொழில்களில் ஏற்றமும் நல்ல லாபமும் உண்டு. நெல் போன்ற தானியங்களை விவசாயம் செய்வது, விற்பது, ரைஸ்மில் போன்ற தொழில்களும் மிகுந்த லாபத்தைப் பெற்றுத் தரும்.