இதனிடையே தஞ்சாவூரில் புதிய மாவட்ட ஆட்சியராக ரேவதி பொறுப்பேற்றார். திமுக முன்னாள் அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பலர் மாவட்ட ஆட்சியரை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். உடல் நிலை சரியில்லாததால் அசோக்குமாரால் அப்போது செல்லமுடியவில்லை.
இந்நிலையில் தவெக அரசில் கொறடாவாக இருக்கும் சபரிவாசன் பேராவூரணியை பூர்வீகமாக கொண்டவர். நிகழ்ச்சி ஒன்றிற்காக பேராவூரணி வந்தார் சபரிவாசன். அதே நிகழ்சிக்கு அசோக்குமாரும் சென்றார். அப்போது இருவரும் மரியாதை நிமித்தமாக பரஸ்பரம் பேசிக் கொண்டனர்.

இவற்றையெல்லாம் சேர்த்து அசோக்குமாருக்கு வேண்டாதவர்கள் அவர் தவெக-வில் இணையப் போவதாகவும், இதற்காக பெரும் தொகை கேட்டுள்ளார் என்றும் வதந்தியை பரப்புகின்றனர். பெரும் கடன் அசோக்குமார் கழுத்தை நெறிப்பது உண்மை. அதிலிருந்து வெளிபட முடியாமல் சிலந்தி வலையில் சிக்கியவராக தவிக்கிறார். தன் நிலையை வெளிப்படையாக பேச முடியவில்ல்லை. திமுக தன்னை காப்பாற்றும் என்ற முழு நம்பிக்கையில் இருக்கிறார்.
ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் இதில் தலையிட்டு கட்சிக்காக உழைத்த அவரை காக்க வேண்டும் என்பதுதான் பலரது எண்ணமாக உள்ளது. கடனில் இருந்து அசோக்குமார கரை சேரவில்லை என்றால், திமுக அவரை காக்கவில்லை என்றால் அவர் முடிவு என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை” என்றனர்.
தனக்கு அடையாளம் கொடுத்தது தன்னை ஆளாக்கியது திமுக. ஒரு போதும் அசோக்குமார் மாற்றுக் கட்சிக்கு செல்லமாட்டார். அவர் கடனில் இருப்பது உண்மை தான், இதற்காக உதயநிதியை சந்தித்து பேசியிருப்பதும் உண்மையே என அவரது தரப்பில் தெரிவித்தனர்.