“விண்ணப்பங்கள் கோருவதற்குப் பொது நாளிதழ்களில் விளம்பரம் தராமல், ஈ-பேப்பரில் மட்டும் விளம்பரம் வெளியிட்டது ஏன்? எந்தத் தகுதியின் அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்? இவர்களது மதிப்பெண் பட்டியல் எங்கே?” என்று நீதிபதிகள் சாடினர்.
இந்த நியமனங்களில் அப்பட்டமான சட்டவிரோதமும், விதிமுறை மீறல்களும் இருப்பது தெளிவாகக் கண்டறியப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மனுதாரர்களின் கோரிக்கை நிராகரிப்பு:
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.வி.கிரி, “தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளவர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆவர். எனவே, மீண்டும் இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் போது இவர்களுக்குக் கருணை அடிப்படையில் முன்னுரிமை அளிக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.
ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்கத் திட்டவட்டமாக மறுத்த நீதிபதிகள், “முறைகேடாகப் பணியில் நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாகப் பணியில் இருந்து நீக்கப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக உறுதி செய்தனர்.
இந்த விவகாரம் அரசியல் ரீதியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது.
காரணம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் உள்ள எஸ்.பி வேலுமணி தமிழக வெற்றிக் கழகத்துடன் நெருங்குவதற்கான தருணத்தை பார்த்து வருகின்றார் என்கிற தகவல் வெளியாகி வருகிறது.
எம்.ஆர் விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் வரிசையில் எஸ்.பி வேலுமணியையும் தங்கள் பக்கம் கொண்டு வருவதில் முதல்வர் விஜய்க்கும் விருப்பம் இருக்கத்தான் செய்கின்றது.
இந்த சூழலில் தான் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு இவர்களது இந்த திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக வந்துள்ளது.
முந்தைய திமுக அமைச்சர்கள் தொடர்பான பல்வேறு முறைகேடு வழக்குகளை தூசி தட்டி லஞ்ச ஒழிப்பு துறையின் மூலமாக விசாரணைக்கு உத்தரவிட்டு வரும் முதல்வர் விஜய், அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த முறைகேடுகளையும் ஊழல் வழக்குகளையும் கவனிப்பாரா என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் நிலையில் எஸ்.பி வேலுமணி தொடர்பான விவகாரத்தில் கடுமையான முறைகேடுகள் நடந்திருக்கிறது என்பதை உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது.
முதல்வர் விஜய் தொடர்ந்து மௌனம் சாதித்தாலோ, அல்லது இவ்வளவு நடந்ததற்கு பிறகும் எஸ்.பி வேலுமணியை தங்கள் பக்கம் இணைத்துக் கொண்டாலோ எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குதிரை பேர விமர்சனங்களுக்கு கூடுதல் வலு சேர்ப்பதாக அமைந்து விடும்.
முதல்வர் விஜய் என்ன செய்யப் போகிறாரோ?