”கட்சியில் பதவி வாங்கித் தரேன்”-தவெகவை சேர்ந்த பெண்ணுக்கு அக்கட்சி நிர்வாகி ஆபாச மெசேஜ் அனுப்பினாரா?- tvk person wromg massege send in party wpmen

Spread the love

தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் தவெக-வின் நகரச் செயலாளர் பாரதிராஜா. இவர் தவெகைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கட்சியில் பதவி வாங்கித் தருவதாகச் சொல்லியிருக்கிறார்.

அப்பெண் திருமணமானவர். இவரது கணவர் கருப்புசாமி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாரதிராஜா, தவெக நிகழ்ச்சிகளுக்கு அந்தப் பெண்ணையும் அழைத்துச் சென்று வந்ததாகச் சொல்கிறார்கள்.

இந்நிலையில் அந்த பெண்ணின் வாட்ஸ்அப்பிற்கு பாரதிராஜா, ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது.

ஆபாச மேசேஜ் - மாதிரி படம்

ஆபாச மேசேஜ் – மாதிரி படம்

இந்நிலையில், பெண்ணின் கணவர் கருப்புசாமி மனைவியின் செல்போனைப் பார்த்துள்ளார். அப்போது பாரதிராஜா தன் மனைவிக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியிருப்பதைப் பார்த்திருக்கிறார். இதுகுறித்து தன் மனைவியிடம் கேட்டிருக்கிறார்.

இதில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது, கருப்புசாமி மனைவியை அடித்ததாகச் சொல்கிறார்கள். வலி தாங்கமுடியாத அவர் மனைவி வல்லம் காவல் நிலையத்திற்கு கணவர் கருப்புசாமி மீது புகார் அளிக்க சென்றதாகச் சொல்லப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *