கோவை மாவட்டத்திற்கு கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் காலை முதல் வெயில் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மதியத்திற்கு மேல் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக காந்திபுரம், ரயில் நிலையம், வின்சென்ட் சாலை, உக்கடம், சுங்கம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.

லங்கா கார்னர் சந்திப்பு, அவிநாசி சாலை மேம்பாலம், கிக்கானிக் பள்ளி அருகில் உள்ள ரயில்வே பாலங்களுக்கு அடியில் மழைநீர் தேங்கியதால், அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.