அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் இப்படத்தை இயக்குகிறார். அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அத்தோடு ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘ஹார்ட் பீட்’ போன்ற திரைப்படம் மற்றும் சீரிஸ்களில் நடித்துப் பலருக்கும் பரிச்சயமான யோகலக்ஷ்மி, பிக் பாஸ் கானா வினோத் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். நடிகராக நடிக்கும் இரண்டாவது படத்திலேயே கன்னட சினிமாவின் உச்ச நடிகரான சிவராஜ்குமாருடன் அபிஷன் ஜீவிந்த் நடிப்பதற்குத் திரைத்துறையினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.