அமைச்சர்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது குற்றம்சாட்டுவதற்கு முன்பு கொஞ்சம் நிதானித்து செயல்பட வேண்டும்.
முந்தைய திமுக ஆட்சி பற்றி எங்களிடம் கேள்வி கேட்பதே தவறு. நாங்கள் உங்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்திருக்கிறோம். அவ்வளவுதான்.
எங்கள் நூற்றாண்டு கால வரலாற்றில் நாங்கள் ஒருபோதும் யாரிடமும் கையூட்டு பெற்றதில்லை. கையூட்டை வேடிக்கை பார்த்ததுமில்லை.

எனவே, ஆதவ் அர்ஜுனா, நேரம் கிடைக்கும்போது கம்யூனிஸ்ட் கட்சிகளின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டும். நீங்கள் படித்து முதல்வருக்கும் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இதுவரை ஊழலுக்காக எந்தக் கம்யூனிஸ்டுகளும் தண்டிக்கப்பட்டதில்லை. எந்தவொரு நீதிமன்றத்திலும் கம்யூனிஸ்டுகள் மீது ஊழல் வழக்கு பதியப்படவில்லை” என்று பேசியிருக்கிறார்.