கரப்பான் பூச்சி: “என் பேச்சு தவறாகத் திரிக்கப்பட்டுவிட்டது” – தலைமை நீதிபதி சூர்யா காந்த் விளக்கம்! | Justice Surya Kant has stated that he did not refer to the youth as cockroaches.

Spread the love

நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகள் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையிலான இளைஞர் போராட்டம் நடந்தது.

போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். மேலும், பிரதமரின் ஆலோசனைப்படி, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சரான பிரஹலாத் ஜோஷிக்கு, அவர் ஏற்கனவே வகித்து வரும் பொறுப்புகளுடன் கூடுதலாக கல்வி அமைச்சகத்தின் பொறுப்பும் வழங்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

அபிஜித் தீப்கே

அபிஜித் தீப்கே

“‘தலைமை நீதிபதி சூர்யா காந்த் எங்களை ‘கரப்பான் பூச்சிகள்’ என்று அழைக்கவில்லை என்றால், நான் இந்தியா வந்திருக்க மாட்டேன். இந்த மிகப்பெரிய இயக்கமும் தொடங்கியிருக்காது. அதற்கு அவருக்கு என் நன்றிகள்” என அபிஜித் தீப்கே தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் ‘பார் அண்ட் பெஞ்ச்’ (Bar and Bench) ஊடகத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணலில், “என் பேச்சு முற்றிலும் தவறான சூழலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. போலிச் சான்றிதழ்கள் மூலம் சட்டத் தொழிலுக்குள் நுழைந்த நபர்களைப் பற்றிய விவாதத்தின்போதே நான் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *