`கரூர் மாவட்டம் இனி தளபதியின் கோட்டை..!’ – முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய்பாஸ்கர் பேச்சு

Spread the love

நிரந்தர முதலமைச்சர் நமது தளபதி தான்!

இங்கு திரண்டிருக்கும் இளைஞர் பட்டாளம் மட்டுமல்ல, இனி வரக்கூடிய தலைமுறையும் உங்கள் பின்னால் தான் அணிவகுக்கும். எனவே, இனிமேல் என்றுமே தமிழகத்தில் தளபதியின் ஆட்சிதான்.

திமுகவின் மனக்கோட்டை தகர்ந்தது, புரட்சித்தலைவி அம்மாவின் கரத்தை வலுப்படுத்துவதற்காக அதிமுகவில் நாங்கள் எண்ணற்ற தியாகங்களைச் செய்திருக்கிறோம். அவரை கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளர் என்று சொன்னோம். அதேபோலத்தான் இதே மேடையில் சொல்கிறேன். தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர் நமது தளபதி தான்!

கடந்த காமராஜர் ஆட்சிக்காலத்தில் ‘இனாம் ஒழிப்புச் சட்டம்’ கொண்டு வரப்பட்டு, கோயில் நிலங்களில் குடியிருந்த ஏழை மக்களுக்குப் பட்டா வழங்கப்பட்டது.

எம்.ஆர் விஜய்பாஸ்கர் - முதல்வர் விஜய்

எம்.ஆர் விஜய்பாஸ்கர் – முதல்வர் விஜய்

கரூர் மாவட்டம் இனி தளபதியின் கோட்டை.!

ஆனால், 70 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் இருந்த அமைச்சரும், முதல்வரும் அந்த நிலங்களில் வாழும் ஏழை மக்களைச் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கினார்கள்.

குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் தான் இந்த அநீதி அதிகமாக நடந்தது. அங்குள்ள ஏழை மக்களின் வீடுகளைச் சீல் வைப்பது, காலி செய்வது, நிலங்களை அபகரிப்பது போன்ற செயல்கள் அரங்கேறின. இது ஒட்டுமொத்த தமிழகத்திற்குமான பிரச்னை.

எனவே, முதல்வர் அவர்கள் இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி, ஏழை மக்களின் நிலப் பிரச்னையைத் தீர்த்து வைக்க வேண்டும். அப்படிச் செய்தால், அந்த ஏழை எளிய மக்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்குக் கடன் பட்டிருப்பார்கள். கரூர் மாவட்டம் இனி தளபதியின் கோட்டை என்பதை நிரூபித்துக் காட்டுவோம் ” என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *