இந்த நிலையில் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தைக் கைவிட கர்நாடக அரசை வலியுறுத்தி காவிரி ஆறு தமிழ்நாட்டில் நுழையும் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பிலிகுண்டுலுவில் ஜூலை 1 ஆம் தேதி பரப்புரையைத் தொடங்கி பென்னாகரம், தருமபுரியிலும், 2 ஆம் தேதி சேலம், மேட்டூர், பவானி, ஈரோட்டிலும், 3 ஆம் தேதி திருப்பூர், கரூர், திருச்சியிலும், 4 ஆம் தேதி தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறையிலும் பரப்புரை செய்துவிட்டு பூம்புகாரில் நிறைவு செய்து அங்கு நடக்கும் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

பரப்புரை பயணம் செல்கின்ற ஊர்களில் பாமகவினரும், விவசாயச் சங்கத்தினரும் வரவேற்பு அளித்தார்கள்.
தருமபுரி மாவட்டத்தில் நடந்த பரப்புரையின்போது தருமபுரி எம்.எல்.ஏ-வான சௌமியா கலந்துகொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டின் உயிர்நாடி காவிரி ஆறுதான், 11 மாவட்ட விவசாயிகள் காவிரியை நம்பி உள்ளனர். காவிரி ஆற்றால் ஐந்தரைக்கோடி மக்கள் பலனடைகிறார்கள். ஆனால், தற்போது கழிவு நீர் மட்டும்தான் இங்கு ஓடுகிறது. இதற்கு மேல் மேகதாதுவில் அணை கட்டிவிட்டால் அந்த உபரிநீர்கூட தமிழ் நாட்டிற்கு வராது.