இரண்டாவது உள்ள துணை முதலமைச்சர் பதவி – லிங்காயத்துகள் சமூகத்தை சேர்ந்தவராக இருக்கலாம்.
கர்நாடகாவில் லிங்காயத் மற்றும் வொக்கலிகா மிக முக்கிய சமூதாயங்கள். சிவக்குமார் வொக்கலிகா சமூதாயத்தைச் சேர்ந்தவர்.
2028-ம் ஆண்டு, கர்நாடகா சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளது. அதை மனதில் வைத்து, சமூதாய வாக்குகளை பெருமளவில் அள்ள இன்னொரு துணை முதலமைச்சர் பதவியை லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனது ஜோதிடர் குறித்துக் கொடுத்த நாள் மற்றும் ராகுல் காந்தி ‘Schedule free’ ஆன நாளான வருகிற ஜூன் 3-ம் தேதி, சிவக்குமார் கர்நாடகா முதலமைச்சராகப் பதவி ஏற்க இருக்கிறார்.
அன்று தெரியும் கர்நாடகா காங்கிரஸின் துணை முதலமைச்சர் செலெக்ஷன்!