பிரபல தமிழ் அறிஞரும், பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா அவர்களின் திடீர் மறைவு தமிழ் உலகையும், அவரது ரசிகர்களையும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 90.
மதுரை திருமங்கலம் அருகேயுள்ள சாத்தங்குடி கிராமத்தில் பிறந்த பாப்பையா படிக்கும் காலத்திலேயே மேடைகளில் மாணவராகப் பேசத் தொடங்கினார். படிப்பு முடித்து அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியைத் துவக்கிய இவரிடம் படித்த பலர் பின்னாளில் சினிமா, எழுத்து எனப் பல தளங்களில் ஆளுமைகளாக வலம் வருகின்றனர்

குறிப்பாக விழாக்காலங்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றம் மூலம் பட்டிதொட்டியெங்கும் தமிழையும், தமிழர் பாரம்பரியத்தையும் கொண்டுச் சேர்த்தார். சாலமன் பாப்பையா என்றால் அவருக்கு இரு கரங்களாக வலம் வந்தவர்கள் பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா – பாரதி பாஸ்கர்.
சாலமன் பாப்பையா மறைவு குறித்து நம்மிடம் பேசிய பேச்சாளர் பாரதி பாஸ்கர், “ரொம்ப கலங்கி நிற்கிறேன். ஒரே இருளாக இருப்பது போல இருக்கிறது. என்னால இதை நம்பவே முடியவில்லை. ஐயாவுடன் என் பயணம் தொடங்கி இது 25-வது ஆண்டு.