தொடர்ந்து, தங்களின் உதவியால் மட்டுமே இது சாத்தியமானது என்று நன்றி கூறினார். இதற்கு பதிலளித்த தங்கம் தென்னரசு, `இது நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களுக்காகச் செய்தது. வீடற்றவர்களின் கனவை நனவாக்கும் கலைஞர் கனவு இல்லம் திட்டம் எத்தனை ஆயிரம் குடும்பங்களுக்கு ஒளியேற்றியுள்ளது என்பதை இன்று கண்கூடாகப் பார்க்கிறேன்.
இந்த திட்டம் எத்தனை பெரிய நன்மைகளைச் செய்துள்ளது என்பதை பார்க்கையில் மனநிறைவாக உள்ளது. இந்தப் புதிய வீட்டில் நீங்கள் தலைநிமிர்ந்து நிற்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது’ எனக் கூறினார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தங்கம் தென்னரசு, `மக்களின் புன்னகையில் நிலைபெறும் நல்லாட்சி. அன்று சிதிலமடைந்த நிலையில் இருந்த ராணியின் ஓட்டு வீட்டிற்குள் சென்றபோது, தலைகுனிந்து, உடலைக் குறுக்கிக் கொண்டுதான் உள்ளே நுழையவே முடிந்தது. ஆனால் இன்று முதலமைச்சர் அறிவித்த கலைஞர் கனவு இல்லம் திட்டத்தால், ராணி தனது புதிய இல்லத்தில் தலைநிமிர்ந்து பெருமிதத்துடன் நிற்பதைக் காணும்போது அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய திருப்தியுடன், அவர்களின் புன்னகையில் நம் ஆட்சியின் வெற்றியைக் காண்கிறோம். எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் நம் திராவிட மாடல் ஆட்சி எப்போதும் விளிம்புநிலை மக்களுக்கான அரணாகத் தொடரும்’ என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.