கள்ளக்குறிச்சி விவகாரம்..எங்களிடம் புகார் வந்தது! – தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்! | news about tn women commission interferes on kallakurichi collector and mla issue

Spread the love

கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வாட்ஸ்அப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பியதாகக் கூற‌ப்படும் விவகாரத்தில் நாளொரு தகவல் வெளியாகி வருவது குழப்பத்தை மேலும் அதிகரித்து வருகிறது.

உண்மையில் இந்த விஷயத்தில் நடந்தது என்ன? என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதெல்லாம் மர்மமாகவே போய்க் கொண்டிருக்கிறது.

முதலில் விவகாரம் குறித்து சமூக ஊடகங்களிலும் ஊடகங்களிலும் தான் தகவல்கள் வெளியாகின. அதிலும் கூட “சொல்லப்படுகிறது’, ‘தெரிய வருகிறது’ என்கிற டைப்பிலேயே செய்தி வந்தது.

சம்பந்தப்பட்ட ஆட்சியர் தலைமைச் செயலாளருக்கு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கத்துக்கு இது குறித்துத் தெரிவித்துள்ளார் எனச் சொன்னார்கள்.

ஆட்சியரின் புகார்க் கடிதம் என எதுவும் பொது வெளியில் வெளியாகவில்லை.

இந்தப் பக்கம் புகார் கூறப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ‘நான் எந்த சோதனைக்கும் தயார்’ எனப் பேசினார்.

மீடியாவில் செய்தி வெளியானது முதல் அரசியல் கட்சிகள் எம்.எல்.ஏ.வுக்குக் கண்டனங்களைத் தெரிவித்து வந்தன.

காவல்துறை தலைமை அலுவலகம்

காவல்துறை தலைமை அலுவலகம்

ஆனால் தனிப்பட்ட முறையில் ஆட்சியர் தரப்பிலிருந்தோ அல்லது மாவட்ட நிர்வாகத்தின் தரப்பிலிருந்தோ இது தொடர்பாக எந்தவொரு விளக்கமும் வரவில்லை.

இந்த நிலையில்தான் இந்த விவகாரம் தொடர்பான முதல் அதிகாரபூர்வ நடவடிக்கையாக தேசிய மகளிர் ஆணையத்தின் சூமோடோ தலையீடு பார்க்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து விசாரித்து 7 நாட்களுக்குள் அறிக்கை தர டிஜிபியைக் கேட்டிருந்தது அந்த ஆணையம்.

இன்னொருபுறம் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம், வழக்கு என களமிறங்கின. பணியிலிருக்கும் பெண் நீதிபதி ஒருவரே பொது வெளியில் இந்த விவகாரம் குறித்துப் பேசினார்.

தொடர்ச்சியான முன்னெடுப்புகளில் ஒன்றாக வழக்கு ஒன்று வந்தது. அதன் பின்னர் தான் இந்த விவகாரத்தில் முதன்முதலாக திருவாய் மலர்ந்திருக்கிறது தமிழக அரசு.

‘சம்ப‌ந்தப்பட்ட ஆட்சியரிடம் இருந்து தலைமைச் செயலாளர் உள்ளிட்ட எவருக்கும் எந்தவொரு புகாரும் வரவில்லை’ என்பதுதான் தமிழக அரசு இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் சொல்லியிருக்கும் அதிகாரபூர்வ தகவல்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *