கவலைப்படாதீங்க.. நாங்க இருக்கோம்.. வெள்ளத்தில் தவிக்கும் நேபாளுக்கு இந்தியா உதவிக்கரம் – மோடி அறிவிப்பு | Nepal Flood: PM Modi conveyed condolences and says India ready to provide all possible humanitarian assistance

Spread the love

International

oi-Nantha Kumar R

காத்மாண்ட்: நேபாளத்தில் இன்று கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 16 பேர் பலியான நிலையில் 105 இந்தியர்கள் உள்பட 200க்கும் அதிகமானவர்கள் மாயமாகி உள்ளனர். இந்நிலையில் தான் நேபாளம் பிரதமர் பாலேந்திர ஷாவிடம், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி இரங்கல் தெரிவித்ததோடு, இந்தியா அனைத்து வகைகளிலும் உதவ தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 16 பேர் வரை பலியாகி உள்ளனர். நேபாளத்தில் சுற்றுலா சென்று 105 இந்தியர்கள் உள்பட மொத்தம் 200க்கும் அதிகமானவர்கள் மாயமாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Nepal Flood

இந்நிலையில் தான் நேபாள பிரதமர் பலேந்திர ஷாவை, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதுபற்றி பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

”நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானவர்கள் பற்றி அந்த நாட்டின் பிரதமர் பலேந்திர ஷாவிடம் பேசி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தேன். இந்த கடினமான சூழலில் நேபாளத்தில் உள்ள சகோதர சகோதரிகளுடன் இந்திய மக்கள் உறுதுணையாக நிற்கிறார்கள்.

நேபாள வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களுக்கு இரங்கலை தெரிவித்தேன். நேபாளத்திற்கு தேவையான அனைத்து மனிதபிமான உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது. நேபாள நிவாரண பணிகளில் நம்முடைய குழுவினர் ஒருங்கிணைப்புடன் செயல்படுகின்றனர்” என்று வருகின்றனர்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *