கவிஞர்-பாவலர் அறிவுமதி
விருத்தாசலம் அருகில் உள்ள சு.கீணனூர். என் தொட்டிலூர். 1949-லேயே கழகக் கொட்டகையைத் திருவள்ளுவர் படிப்பக மாசுக் கண்ட ஊர். கிளைச் செயலாளரான என் அப்பா கேசவன், புத்தூர் ஆசிரியர் இராதாகிருட்டிணன் அவர்களைத் தலைவராகக் திருமணங்களாகவே நடத்தி கொண்டு சீர்திருத்தத் திருமணங்களாகவே நடத்தி வைப்பார். அதற்காக விருத்தாசலத்திலிருந்து மாட்டு வண்டியில் பாட்டுப் பெட்டி வரும். அந்தப் பாட்டுப் பெட்டி வழியாகத் தான் அய்யா
கண்ணதாசனும் எங்களூருக்கு வந்தார்.
நகரத்துக்குப் போய்த் திரும்புகையில் அப்பா ஆறேழு இதழ்களோடு வருவார். நம் நாடு, திராவிட நாடு, முரசொலி, முத்தாரம், காஞ்சி, மாலைமணி, நடிகன் குரல் என இவற்றோடு தென்றலும் வரும். தென்றல் இதழோடு அய்யா கண்ணதாசனும் எங்களூருக்கு வந்தார். தென்றலில், அண்மை யில் எழுதிய பாடல்கள் என அவர் பதிவு செய்திருந்த ‘காலங்களில் அவள் வசந்தம் பாடலை உயர்நிலைப் பள்ளி நாள்களில் கம்மங்காடு சோளக்காடு வழியே பள்ளி விட்டு வருகையில் சொந்த மெட்டில் பாடிக்கொண்டே வந்த பையன் நான்.
எட்டு மைல் நடந்துபோய்த் திரைப்படம் பார்த்துவிட்டு வாங்கி வருகிற திரைப்படப் பாட்டுப் புத்தகத்தில் உள்ள பாடல்களை, விருப்பமாய் வளர்க்கும் ஆட்டை வரப்பில் மேய்த்தபடி பாடுகையிலும் அய்யா கண்ணதாசன் என்னோடு இருப்பார். எங்கள் வீரனார் கோயில் காட்டு நாரத்தை மரத்தின் கீழ் என்னை அமரவைத்து எழுதய்யா கவிதை’ என்று என்னை உற்சாகப்படுத்தியவர்களிலும் இவர் இருக்கிறார்.
ஊராட்சி மன்ற வானொலிப் பெட்டி வழியாகவும் நீங்கள் கேட்டவை, நேயர் விருப்பம், இலங்கை வானொலி வழியாகவும் எனக்குள் வந்து தமிழாடிக் கொண்டே இருந்தார் அய்யா. அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை மாணவனாக இருக்கையில் பேராசிரியர்கள் ச.மெய்யப்பன், இளவரசு, அழபழநியப்பன், கரு தியாகராசன் போன்றோர் இந்தத் தமிழ்ப் பையனை அய்யாவிடம் முதன்முதலாக அறிமுகம் செய்து வைக்கிறார்கள். நான் வரைந்திருந்த அவரது ஓவியத்தை அவரிடம் நீட்டுகிறேன். பாராட்டிவிட்டுக் கையொப்பமிட்டுத் தருகிறார்.
அப்போது ‘அவிழரும்பு என்று ஒரு கையெழுத்து ஏடு நடத்துகிறேன். அதற்கு ஒரு வாழ்த்து கேட்கிறேன். அங்கேயே, மகிழ்வுந்தின் மீது ஏட்டை வைத்து, “கவியரும்புக, கற்பனைக் கொடியென புவியரும்புக பொலியக் கண்ணுற ‘அவிழரும்பு’ அவிழ்ந்தது தமிழிலே, இவை செழிக்க என் மனம் வாழ்த்துமே!” என்று உடனே எழுதி, அன்புடன் கண்ணதாசன் என்று கையொப்பமிட்டுத் தந்தார்.
சென்னை வாழ்க்கையில், ‘என் பிரிய வசந்தமே’ என்ற என் முதல் கவிதை நூலுக்குத் தாயுரை எங்கள் வீரனார் கோயில் காட்டு நாரத்தை மரத்தின் கீழ் என்னை அமரவைத்து ‘எழுதய்யா கவிதை’ என்று என்னை உற்சாகப் படுத்தியவர்களிலும் இவர் இருக்கிறார். வேண்டும் என்று கேட்டேன். தருகிறேன் என்றார். ஆனாலும், ‘மாதங்களில் அவர் மறதி’ ஆனார். விடவில்லை நான். ஒருநாள், ஆழ்வார்ப்பேட்டையில் இருந்த கவிதா திருமண மண்டபத்தில் அவரைக் காணச் சென்றேன்.
“வாருங்கள் மதி, உட்காருங்க. பலமுறை திருப்பி அனுப்பிவிட்டேன்.
இருங்க” என்று என்னை உட்காரச் சொல்லிவிட்டு, என் நூலை ஒருமுறை படித்துவிட்டு, “கண்ணப்பா, எழுது” என்று நடந்து கொண்டே அய்யா சொல்லச் சொல்ல.. அண்ணன் இராம கண்ணப்பன் எழுத எழுத வாங்கிப் படித்துப் பார்த்தார். ஒரு பிழையும் இல்லை. அன்பன் கண்ணதாசன் என்று அதிலும் கையொப்பமிட்டு வாழ்த்தி
‘அறிவுமதி வளர்ந்துவரும் இளங்கவிஞர் தலைமுறையில் ஒரு சிறந்த கவிஞராவார்! காதலியைக் கானமாகவும், பிருந்தாவனமாகவும், பிரார்த்தனையாகவும் பல வழிகளில் இவர் காண்கிறார். தோற்றம் படைப்பதில் இது புது முயற்சி!’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே கவிதா திருமண மண்டபம் என் உயிருக்கினிய நண்பர், நடிகர், இயக்குநர் தசரதன் இயக்கும் ஒரு நடிகரைப் பற்றிய கதையில் ஒரு நாயகன் நம்பிக்கையோடு பாடுவதாக ஒரு பாடலை என்னை எழுத வைக்கிறார். இசை, அண்ணன் சந்திரபோசு. பல்லவி எழுதி முடிக்கிறேன். வேறொரு படத்துக்குப் பாடல் எழுத வந்துவிடுகிறார். கவிஞர் ‘நாம் நாளைக்கு அமரலாம்’ என்று புறப்படுகிறோம். வெளியே வருகையில், தசரதன் ‘அறிவுமதி’ என்று என்னை அறிமுகம் செய்கிறார். அறிவுமதி எனக்கு அண்ணாமலையிலேயே அறிமுகமாயிற்றே! அவரது நூலுக்கும் வாழ்த்துரை தந்துள்ளேனே” என்கிறார்.
“இந்தப் படத்தில் ஒரு பாடல் எழுத வைக்கிறேன்” என்கிறார் தசரதன். “என்ன பல்லவி? என்று அய்யா கேட்கிறார். “மனமே, இன்னும் கொஞ்சம் பொறு! வருங்காலம் உன்னைத் தேடி வந்திடும்! ஒரு கோடி இன்பங்கள் தந்திடும்! கனவில் வந்த சொர்க்கம் காணும் நேரம் தூரம் இல்லையே!” என்கிறேன். உடனே, “அடடே! என் முதல் பல்லவியும் ஏறக்குறைய இதே போன்றுதானே! “கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே” என்று கூறியபடியே சுட்டி யணைத்து முதுகில் தட்டிக் கொடுத்துப் பாராட்டிய அய்யா.
சில காலத்திற்குப் பிறகு. அமெரிக்கா விலிருந்து அமைதி யாகத் திரும்பினார். உலகத் தமிழர்களே உருகி அழுதார்கள். அன்றைய இறுதி ஊர்வலப் பெருங் கூட்டத்தில் இசைஞானி இளையராஜா, வைரமுத்து இருவருடன் நானும் நடக்கிறேன். கண்ணம்மாபேட்டை நாங்கள் மூவரும் ஓரிடத்தில் அமர்கிறோம். துணிப்பந்தலில் அமர்ந்திருந்த முதல்வர் எம்ஜி ஆர், இசைஞானியை சைகையால் அவரிடம் வரும்படி அழைக்கிறார்.
மாபெரும் நம் காலத் தமிழனின் பெருமித அடையாளத்தை அய்யா கண்ணதாசனை… கண்ணம்மா நெருப்பிற்கு ஒப்படைக்கிற நொடியில் கதறியழுதபடி ஓடிய வைரமுத்துவின் சேவல் இப்போதும் எனக்குள் கேட்கிறது. தம்பி என்னுயிர்த் பழநிபாரதியின் அப்பா சாமி பழநியப்பனை மட்டுமா… இந்தப் பட்டிக்காட்டுப் பையனைப் பட்டணத்திற்கு அழைத்து வந்ததிலும்கூட அய்யா கண்ணதாசன் இருக்கிறார்.
அவரைப் பற்றிப் படிக்க வேண்டுமென்றால், அய்யா தலைவர் நெடுமாறன் அவர்களது நூலைப் படியுங்கள். அவரைப் பற்றிக் கேட்க வேண்டுமென்றால், அய்யா நெல்லை கண்ணன் அவர்களது பொழிவைக் கேளுங்கள். ஏன்… தமிழருவி மணியன் அய்யாவை அழைத்து, அய்யாவைப் பற்றிப் பேசச் சொல்லுங்கள். குற்றாலப் பேரருவியில் குளித்து மகிழ்வீர்கள். பாரதியைப் போல, பாரதி தாசனைப் போல, தனக்கென ஒரு தனி நடை என்று சொல்ல மாட்டேன். தமிழுக்கென ஒரு தனி நடை கண்டவர்.
பாடல் தமிழாயினும், உரை நடைத் தமிழாயினும் எளிமையின் எளிமையில் இனித்த நடை கண்ட முன்னத்தியர் அவர். ‘இன்னொரு கைகளிலே யார். யார் கேட்டுப்பாருங்கள். ‘பாவங்கள்’ பூக்க வைக்கும் பாட்டுக்காரர் அவர். கடினம் அது. நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந்தென்றலே அவர்தான்!
எட்டடுக்கு எழுதினாலும், ஏழடுக்கு உயரத்தர்தான் அவர். எழுநிலை மாட இளங்-கோ வாழ்வர் நம் கவிஞர். ஆனாலும் இனித்த தமிழின் எளிமை.. எளிமை… எளிமை அவர். வாழ்விலும் சரி, தமிழிலும் சரி.
இன்று நூறர்!
என்றும் தமிழின் வேரர்!



