நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட சுர்ஜித்தின் பெற்றோர் மீதானக் குற்றப் பத்திரிகையை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
விசிக தலைவர் தொல். திருமாவளனும் குற்றப் பத்திரிகையை ரத்து செய்ததற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “நெல்லை கவின் கொலை வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட சுர்ஜித்தின் (ஏ1) பெற்றோர் சரவணன்(ஏ2) கிருஷ்ணகுமாரி(ஏ3) ஆகியோர் மீதான “குற்றச்சாற்று அறிக்கையை’ மதுரை உயர்நீதிமன்றம் ‘ரத்து’ செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
விசாரணைக்குப் பின்னர் ஆதாரங்கள் இல்லையென விடுதலை செய்வதுதான் நீதிமன்றத்துக்குள்ள அதிகாரம். குற்ற விசாரணை தொடங்குவதற்கு முன்னரே குற்ற அறிக்கையை ‘ரத்து’ செய்வது ‘தவறான முன்மாதிரி’ ஆகும்.