Last Updated:
காட்டெருமை யானை குட்டியை துரத்த யானை குட்டி தெறித்து ஓடிய காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் அதிக அளவில் வனப்பகுதிகளை கொண்ட மாவட்டமாக விளங்குவதால், இந்த வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டுமாடு மற்றும் பல்வேறு விலங்குகளுக்கு வாழ்விடமாக திகழ்கிறது.
வனப்பகுதிகளில் வனவிலங்குகள் ஒன்றுக்கொன்று சந்தித்துக் கொள்வது இயல்பான ஒன்று. அவ்வாறு சந்தித்துக் கொள்ளும் பொழுது அவை எதிர்கொள்ளும் விஷயங்கள் மற்றும் செயல்முறைகள் நமக்கு ஆச்சரியமாகவும் வியப்பாகவும் இருக்கும்.
சமீப தினங்களில் காட்டு மாடுகள் நீலகிரியில் பல்வேறு கிராமப் பகுதிகளிலும் கூட இயல்பாக மனிதர்களோடு ஒன்றி வாழும் விதமாக வாழ தொடங்கிவிட்டது. ஆனால் சமீப காலங்களில் காட்டு யானைகள் நீலகிரியில் பல்வேறு பகுதிகளிலும் முகாமிட்டுள்ளது.
யானைகள் பொதுவாக கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் ஒரு சில பகுதிகளில் முகாமிட்டுள்ளதால், அந்த பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கும் பாதுகாப்பாக செல்லும் வழியும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்றைய தினம் காட்டெருமையும் காட்டு யானையும் ஒன்றோடு ஒன்று பார்த்துக் கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கோத்தகிரி – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள முள்ளூர் மாமரம் கிராம பகுதிகளுக்கு அருகாமையில் உள்ள தேயிலை தோட்டத்தில் காட்டு எருமையும் யானையும் மேய்ந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் யானையும் காட்டெருமையும் ஒன்றையொன்று எதிரெதிர் பார்க்க, காட்டெருமை யானை குட்டியை துரத்த, யானை குட்டி தெறித்து ஓடிய காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி ரசிக்க வைத்துள்ளது.
The Nilgiris,Tamil Nadu
Jun 01, 2026 10:58 AM IST