சில சமயங்களில் ‘கார்னியல் அப்ரேஷன்ஸ்’ (Corneal abrasions) ஏற்படலாம். அதாவது நம் நகம் போன்றவை பட்டுக் கருவிழியின் மேல் படலத்தில் சிராய்ப்புகள் (Epithelial defect) உண்டாகலாம்.
நீண்ட நாள் உபயோகம், கருவிழியில் புண் (Corneal ulcer) ஏற்படலாம்.
கான்டாக்ட் லென்ஸ் கண்ணுக்குள்ளேயே புதைந்துவிடுமா?
சில சமயங்களில் கான்டாக்ட் லென்ஸ் கண்ணுக்குள்ளேயே நகர்ந்து மறைந்துவிட (புதைந்துவிட) வாய்ப்புள்ளது. அது மிகவும் மென்மையான பொருளால் ஆனது என்பதால் கண்ணுக்குள் எளிதாக நகர்ந்து செல்லக்கூடும்.

அப்படி கான்டாக்ட் லென்ஸ் கண்ணுக்குள் எங்காவது போய்விட்டால், கண்களைக் கசக்கக் கூடாது. உடனே உங்கள் கண் மருத்துவரைச் சென்று பாருங்கள். கண் இமைகளின் மேல் அல்லது கீழ் பகுதியில் (Conjunctiva) அந்த லென்ஸ் எங்காவது ஒட்டியிருக்கலாம். மருத்துவர் அதைப் பரிசோதித்து அழகாக வெளியே எடுத்துவிடுவார். கண்களைத் தேய்த்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.
எனவே, இரவில் உங்கள் லென்ஸைக் கழற்றிவிட்டுத் தூங்குங்கள். ஏனென்றால், கான்டாக்ட் லென்ஸ் நமக்கு எவ்வளவு தெளிவான பார்வையைக் கொடுக்கிறதோ, அதே அளவிற்கு அதில் நிறைய பிரச்னைகளும் உள்ளன.
டாக்டர் விஜய் ஷங்கர்:
சென்னை, ஆர்.ஏ.புரம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் சங்கர் ஐ கேர் கிளினிக் வைத்து நடத்துகிறார். இத்துறையில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.