`காயத்தோடு நிற்கிறேன் என்னால் எதுவும் பேச முடியாது’ – கும்பகோணத்தில் தழுதழுத்த எடப்பாடி பழனிசாமி!

Spread the love

இதைதொடர்ந்து தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் மகேந்திரன். இது அதிமுக வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது. தன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினால் என் ஆத்மா சாந்தியடையும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் மகேந்திரன் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் எடப்பாடி பழனிசாமி. அப்போது, `நீங்க உயிரா நினைச்ச தலைவர் உங்களை பாக்க வந்திருக்கார் எந்திரிங்க’ என்று முனீஸ்வரி கதறியதை பார்த்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவரும் கலங்கி விட்டனர்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “மகேந்திரன் தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும், மன வேதனையும் அளிக்கிறது. பல்லாண்டுகாலமாக சிறப்பான முறையிலே கட்சி பணியாற்றி, நிர்வாகிகளிடத்திலும், தொண்டர்களிடத்திலும், தலைமைக்கும் மிகுந்த விசுவாசமாக செயல்பட்டவர். மகேந்திரனின் பெண் குழந்தை, வளர்ந்து, பள்ளிபடிப்பை தொடங்கி, கல்வி கற்று முடிக்கும் வரை ஆகும் அனைத்துக் கல்விக் கட்டணத்தையும் அதிமுக ஏற்றுக் கொள்ளும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *