கார்த்தி 30 : படப்பிடிப்பு தாமதமா? 6 ஏக்கரில் பிரமாண்ட வீடு; இணையும் நடிகர்கள்! | Shoot Update | karthi’s debut telugu movie ‘karthi 30’ shoot update exclusively

Spread the love

படத்திற்கு படம் வித்தியாசமான ஜானர்களில் நடித்து வரும் கார்த்தி, அடுத்தும் ஆச்சர்யங்கள் கொடுக்க காத்திருக்கிறார். அண்ணன் சூர்யாவைத் தொடர்ந்து கார்த்தியும் நேரடி தெலுங்கில் கால் பதித்திருக்கிறார்.. “விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தைத் தயாரித்த சித்தாரா நிறுவனம், ‘கார்த்தி 30’ படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் சீறிப்பாயவிருக்கிறது. முன்னதாக சில காரணங்களால் படப்பிடிப்பு தாமதம் ஆகிறது என்ற பேச்சும் இருந்த நிலையில் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இனி…

யோகிபாபுவுடன்..

யோகிபாபுவுடன்..

கார்த்தி இப்போது ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கத்தில் ‘மார்ஷல்’, டோலிவுட் இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்கத்தில் ‘கார்த்தி 30’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ‘மார்ஷல்’ படத்தில் கார்த்தியின் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன், சத்யராஜ், லால் என நட்சத்திரப் பட்டாளம் இருக்கிறது. ராமேஸ்வரம் பகுதிகளில் இதன் ஷூட்டிங் நடந்து வந்த நிலையில், இப்போது படப்பிடிப்புக்கு சிறிது இடைவெளி விட்டுள்ளனர். கடந்த மே மாதம் கார்த்தியின் பிறந்தநாளில் ‘கார்த்தி 30’ படத்தின் பூஜை ஹைதராபாத்தில் நடந்தது. இதன் ஹீரோயின் மீனாட்சி சௌத்ரி, ‘வாரிசு’ தயாரிப்பாளர் தில்ராஜூ, சுனில் எனப் பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

படப்பூஜையின் போது..

படப்பூஜையின் போது..

தெலுங்கில் இதற்கு முன் ‘மேட்’, ‘மேட் ஸ்கொயர்’, ‘டில்லு ஸ்கொயர்’ படங்களை இயக்கிய கல்யாண் சங்கர் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் ஷூட்டிங் படப்பூஜை ஆரம்பித்த வேகத்திலேயே ஆரம்பமானது. சில வாரங்கள் நடந்த படப்பிடிப்பில் யோகிபாபு, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் என தமிழ் முகங்கள் பலர் இணைந்தனர். படத்தில பிரமாண்டமான வீடு ஒன்றும் முக்கிய பாத்திரமாக இருக்கிறது. இதற்காக 6 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான வீடு அமைக்கப்பட்டு வருகிறது. ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்திலேயே சூர்யாவின் வீடு மிரட்டலான வீடாக இருந்தது. இதில் அதை விட பல மடங்கு பிரமாண்ட வீடாக அமைத்து வருகின்றனர்.

மீனாட்சி சௌத்ரி

மீனாட்சி சௌத்ரி

இந்த வீட்டில்தான் முக்கியமான காட்சிகள் படமாக்க திட்டமிட்டுள்ளனர். இப்போது இந்த செட் அமைக்கும் பணியின் காரணமாக படப்பிடிப்புக்கு பிரேக் விட்டுள்ளனர். இந்த செட் ரெடியானதும் படப்பிடிப்பு வேகமெடுக்கும் என்ற பேச்சு இருக்கிறது. ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்குப் பிறகு கார்த்தியுடன் ஜெயராம் இணைந்துள்ளார். அனேகமாக டிசம்பரில் படப்பிடிப்பைத் தொடங்கி, ஒரே வீச்சில் நிறைவு செய்கின்றனர். கோடை விடுமுறையில் திரைக்குக் கொண்டுவரவும் திட்டமிட்டு வருவதாகச் சொல்கிறார்கள். இதைப் போல, ‘மார்ஷல்’ படத்திற்கு ராமேஸ்வரம் பகுதிகளில் பிரமாண்ட செட்டுகள் அமைத்து, படமாக்கினார்கள். அந்த செட் வொர்க்கும் அவ்வப்போது பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. டிசம்பரில் ‘மார்ஷல்’ படப்பிடிப்பிலும் இணைய கார்த்தி திட்டமிட்டுள்ளார் என்ற பேச்சும் இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *