காலா முதல் பொம்மலாட்டம் வரை! – தமிழ் சினிமாவில் நானா படேகரின் தனித்துவமான நடிப்பு மொழி | Nana Patekar’s Indelible Mark on Tamil Cinema

Spread the love

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

சில நடிகர்கள் நிறைய படங்களில் நடித்தாலும் சில காட்சிகள் மட்டுமே நினைவில் நிற்கும். ஆனால், சில நடிகர்கள் குறைவான படங்களில் தோன்றினாலும் அவர்கள் ஏற்ற கதாபாத்திரங்கள் ஆண்டுகள் பல கழித்தும் நம் மனதை விட்டு அகலாது. நானா படேகர் அந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.

இந்தியத் திரையுலகில் தனக்கெனத் தனித்துவமான நடிப்பு மொழியை உருவாக்கிய நானா படேகர், தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தது பாரதிராஜாவின் ‘பொம்மலாட்டம்’, பா.ரஞ்சித்தின் ‘காலா’ ஆகிய இரண்டு முக்கியமான படங்களின் வழியாகத்தான். இரண்டு படங்கள், இரண்டு கதாபாத்திரங்கள், முற்றிலும் வேறுபட்ட இரு உலகங்கள்;

ஆனால் அவற்றை இணைத்த ஒரே சக்தி – நானா படேகரின் அபாரமான நடிப்பு!

‘பொம்மலாட்டம்’ – ராணா என்ற மர்மம்பொம்மலாட்டம் படத்தில் நானா படேகர் ஏற்ற ‘ராணா’ வழக்கமான கதாபாத்திரம் அல்ல. தனக்கென்று ஒரு உலகத்தைப் படைக்கும் திரைப்பட இயக்குநர்; அதே நேரத்தில் பார்வையாளர்களின் சந்தேகத்திற்கும் விசாரணைக்கும் உள்ளாகும் மனிதர்.

ராணாவை அவர் மிகை நடிப்பால் உருவாக்கவில்லை. பார்வையில் இருந்த மர்மம், குரலில் இருந்த கட்டுப்பாடு, உரையாடல்களுக்கு இடையே விட்ட இடைவெளி என அமைதியாலேயே அந்த மனிதனை உறைவிடமாக்கினார். ஒரு கதாபாத்திரத்திற்கு வசனங்களை மட்டும் கொடுக்காமல், அதற்குப் பின்னால் ஒரு முழு மனிதனை உருவாக்குவதுதான் நானா படேகரின் தனித்தன்மை.

நானா படேகர்

நானா படேகர்

“காலா’ – ஹரிதாதா என்ற அதிகார மனநிலைராணா ஒரு மர்மம் என்றால், ‘காலா’வின் ஹரிதேவ் அபயங்கர் (ஹரிதாதா) ஒரு அதிகார மனநிலை! அவன் வெறும் எதிர்மறைக் கதாபாத்திரம் மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட மேலாதிக்கச் சமூகப் பார்வையின் பிரதிநிதி. காலாவுக்கு நிலம் என்பது வாழ்வு, நினைவு மற்றும் தலைமுறைகளின் அடையாளம்;

ஆனால் ஹரிதாதாவுக்கு நிலம் என்பது அதிகாரத்தைக் கைப்பற்றும் ஒரு சொத்து. காலா நிலத்தோடு வாழ்கிறான், ஹரிதாதாவோ நிலத்தின் மீது ஆட்சி செய்ய நினைக்கிறான். இதுவே இருவருக்கும் இடையிலான அடிப்படை மோதலாகிறது.

தன் தீமையையே நன்மை என்றும், தன் அதிகாரமே இயல்பானது என்றும் நம்புவதுதான் ஹரிதாதாவின் ஆபத்தான பக்கம். பணம் மற்றும் அதிகாரத்தால் எதையும் வாங்கிவிடலாம் என நினைக்கும் அவனுக்கு, பணத்தால் விலைக்கு வாங்க முடியாத மனிதர்களின் கூட்டமாக காலா நிற்கிறான். “இந்த மனிதனை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லையே” என்ற அவனது கோபத்திற்குள் ஒரு ஆழமான பயமும் பதற்றமும் ஒளிந்திருக்கிறது

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *