”காவிரி நீரை பெறுவதில் தவெக அரசு மெத்தனம்; முதல்வர் விஜய் வாய்திறப்பதில்லை”- எடப்பாடி பழனிசாமி!

Spread the love

தஞ்சாவூரில் நடைபெற்ற அ.தி.மு.க நிர்வாகி இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் எடப்பாடி பானிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, “த.வெ.க ஆட்சிக்கு வந்த பிறகு, டெல்டா பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடிக்கு தேவையான நீரை, டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு வழங்காததால், குறுவை சாகுபடி பாதிப்பை சந்தித்தது.

எடப்பாடி பழனிசாமி

முதல்வர் விஜய் மேட்டூர் அணைக்கு சென்று, 45 நாளுக்கு தண்ணி திறக்கப்படும் என அறிவித்து, தண்ணீரை திறந்தார். ஆனால், 45 நாள்களுக்கு தண்ணீர் போதது. சம்பா விளைச்சல், முழுமை பெற வேண்டும் என்றால், ஜனவரி இறுதி வரை, காவிரியில் தண்ணீரை விட வேண்டும். ஆனால் 45 நாள்களுடன் தண்ணீரை நிறுத்தி விட்டார்கள். அத்துடன் மேட்டூர் அணையில், 61 அடி தான் தண்ணீர் தான் உள்ளது. இது மே மாதம் குடிநீர் தேவைக்கே போதாது.

த.வெ.க அரசு, காவிரி நதி நீர் சம்பந்தமான பிரச்னையில், கவனம் செலுத்தவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் இவ்வளவு டி.எம்.சி தண்ணீரை திறக்க வேண்டும் என உத்தரவு போட்டார்கள். அந்த உத்தரவின்படி தண்ணீரை பெறுவதற்கான முயற்சியை த.வெ.க அரசு எடுக்கவில்லை. முதல்வர் விஜய் தனி அக்கறை செலுத்தி, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய பங்கு நீரை பெறுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றிருக்க வேண்டும். ஏற்கனவே, அ.தி.மு.க பெற்று தந்த தீர்ப்பை கூட நடைமுறைப்படுத்தாத, கையாளாகாத அரசாக த.வெ.க அரசு உள்ளது.

மேகதாது அணையை கட்டியே தீர்வோம் என கர்நாடக முதல்வர் சிவக்குமார் கூறி வருகிறார். ஆனால், நமது முதல்வர் வாய் திறக்க மறுக்கிறார். இதற்கு எந்த பதிலும் கிடையாது. இதனால், விவசாயிகள் மிகப்பெரிய அச்சத்தில் உள்ளனர். விவசாயிகளின் அச்சத்தை போக்கும் விதமாக, மேகதாது அணை குறித்து, முதல்வர் விஜய் விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும். கீழ்படுகை மாநிலத்தின் அனுமதி இல்லாமல், மேல்படுகை மாநிலத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே, எந்த ஒரு கட்டுமானத்தையும் தொடங்கக் கூடாது. தண்ணீரை தேக்கக் கூடாது என்ற தீர்ப்பை அ.தி.மு.க பெற்று தந்துள்ளது. அதை நடைமுறைப்படுத்தவில்லை.

காவிரி மேலாண்மை ஆணையம் காவிரியில் 11 டி.எம்.சி., தண்ணீரை திறக்க உத்தரவிட்டும், திறக்கவில்லை. இது தொடர்பான தமிழக அரசின் வழக்கை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அந்த அளவுக்கு இவர்களின் நிர்வாகம் உள்ளது. சரியான வாதத்தை எடுத்து வைக்கவில்லை. இதனால், டெல்டா மாவட்ட விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *