காவிரி விவகாரம்: “நான் அப்படி சொல்லவில்லையே…” – கர்நாடக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பதில்! | Karnataka Minister has responded to Udayanidhi Stalin on Cauvery issue.

Spread the love

காவிரி ஒழுங்குமுறைக்குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது குறித்து முடிவெடுக்கும் தகுதி வாய்ந்த அதிகாரம் “காவிரி நீர் மேலாண்மை வாரியத்திற்கு’ மட்டுமே உள்ளது. இதில் கர்நாடக அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை.

கடந்த 30 ஜூன் 2026 நிலவரப்படி, கர்நாடகாவின் நான்கு நீர்த்தேக்கங்களின் மொத்த நேரடி நீர் இருப்பு வெறும் 15.761 டி.எம்.சி மட்டுமே ஆகும். இந்த அளவு, அடுத்த மூன்று மாதங்களுக்கு இம்மாநிலத்தின் குடிநீர் தேவையை நிறைவு செய்யக் கூடப் போதுமானதாக இல்லை.

கடந்த 30.06.2026 அன்று நடைபெற்ற காவிரி ஒழுங்குமுறைக்குழு கூட்டம் வரை, இந்த நான்கு அணைகளுக்கும் வந்த ஒட்டுமொத்த நீர்வரத்து 4.05 டி.எம்.சி ஆகும் (பிலிகுண்டுலுவில் 2.915 டி.எம்.சி).

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

கடந்த 16.06.2026 மற்றும் 30.06.2026 ஆகிய தேதிகளில் நடைபெற்ற காவிரி ஒழுங்குமுறைக்குழு கூட்டங்களிலும், 23.06.2026 அன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை வாரிய கூட்டத்திலும் கர்நாடகா தனது நிலையைச் சமர்ப்பித்துள்ளது. அதன்படி பெங்களூரு பெருநகரப் பகுதி, மைசூரு, மாண்டியா, சாமராஜநகர், ராமநகர் மற்றும் பிற நகரங்களின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த நான்கு அணைகளின் நீர் இருப்பைப் பாதுகாப்பது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டது.

கூட்டங்களில் கர்நாடகா சமர்ப்பித்த இந்த வாதங்களை ஆய்வு செய்த காவிரி நீர் மேலாண்மை வாரியமும், ஒழுங்குமுறைக்குழுவும் பின்வரும் முடிவுகளை வழங்கியுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *