கிருஷ்ணகிரி: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது; சிக்கியது எப்படி? | krishnagiri Sexual harassment mentally disabled women

Spread the love

இங்கு தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்குக் கூட்டிச் சென்று கொண்டிருந்த நிலையில், அவர் வயிறு வீக்கமடைந்ததைப் பார்த்து உறவினர்கள் விசாரிக்க, அதைப்பற்றி அப்பெண்ணுக்கு எதுவும் தெரியாத நிலையில் வயிற்றில் கட்டி உருவாகியிருக்குமோ என்ற சந்தேகத்தில் ஊத்தங்கரையிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவர்கள் சோதித்து பார்த்ததில் அவர் நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதைக் கேட்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

பின்பு ஊத்தங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட இன்ஸ்பெக்டர் வளர்மதி உள்ளிட்ட போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தினமும் ஆடு மேய்க்க அப்பெண் செல்லும்போது, அவரைப்போல ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து வரும் மிட்டப்பள்ளியைச் சேர்ந்த 53 வயதான கோவிந்தசாமி என்பவர் நல்லவிதமாகப் பழகி வந்திருக்கிறார்.

பின்பு அப்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் காரணமாக அவர் கர்ப்பமாகியுள்ளது தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாகியிருந்த கோவிந்தசாமியை தருமபுரி மாவட்டம் முத்தானூர் பகுதியில் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *