கிருஷ்ணகிரி: "15 நாளா மகளைக் காணோம்; சீக்கிரம் கண்டுபுடிச்சு கொடுங்கய்யா" – கதறும் பெற்றோர்

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வசிக்கும் ராஜூ – நிர்மலா தம்பதியின் 15 வயது மகள் 10 ஆம் வகுப்பு முடித்துவிட்டு அப்பகுதியிலுள்ள அரசு ஐ.டி.ஐ-யில் முதலாமாண்டு படித்து வந்தார்.

மாணவி மாயம்

கடந்த 10 ஆம் தேதி ஐ.டி.ஐ-க்கு சென்ற மாணவி, மாலையில் ‘பேருந்துக்காக காத்திருக்கிறேன், சீக்கிரம் வந்துவிடுகிறேன்’ என்று தன் தாயாருக்கு போன் செய்து பேசியுள்ளார்.

ஆனால், பல மணி நேரம் கடந்தும் அந்த மாணவி வீடு திரும்பவில்லை. பெற்றோர் தொடர்ந்து போன் செய்தபோது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட தகவல் வந்துள்ளது.

இதனால் பதறிப்போன பெற்றோர், தெரிந்தவர்களிடம் விசாரித்தும், பல இடங்களில் தேடி அலைந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதையடுத்து ஓசூர் மந்திகிரி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதோடு இருவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் போலீஸிடம் தெரிவித்துள்ளனர்.

மந்திகிரி காவல் நிலையம்

ஆனால், புகார் கொடுத்து இரண்டு வாரங்கள் கடந்த பின்பும் மகள் என்ன ஆனார் என்ற தகவல் தெரியாமல் கண்ணீருடன் தினமும் காவல் நிலையத்துக்கு அலைந்து கொண்டிருக்கின்றனர்.

15 வயது சிறுமி காணாமல் போன புகாரை விசாரித்து கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டாமல் காவல்துறையினர் சுணக்கம் காட்டி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆனால், காவல்துறை தரப்பிலோ, ‘மாணவி குறித்து தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருக்கிறோம், விரைவில் கண்டுபிடித்து விடுவோம்’ என்று தெரிவித்து வருகின்றனர்.

‘மாணவியை விரைந்து கண்டுபிடிக்க ஓசூர் வட்ட காவல்துறையினரிடம் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கடுமையாக உத்தரவிட்டு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்’ என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *