என் திரை வாழ்க்கையில் ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்கிக்கொள்ள ‘கீதாஞ்சலி’ படம் எனக்கு மிகவும் உதவியது.
என் மகன்கள் நாக சைதன்யாவும் அகில் அக்கினேனியும் ஒரே மாதிரியான வழக்கமான கதைகளில் நடிக்காமல், இதுபோன்று துணிச்சலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
ஆனால், இன்றைக்கு இருக்கக்கூடிய சூழலில் நடிகர்கள் அப்படித் துணிச்சலான முடிவுகளை எடுப்பது அவ்வளவு எளிதல்ல என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன்.
1990-களில் சில படங்கள் தோல்வியடைந்தாலும் நடிகர்களுக்கு மீண்டு வர வாய்ப்புகள் இருந்தன. ஆனால், இப்போது திரையுலகம் அதிவேகமாக இயங்குகிறது. ரசிகர்களுக்கும் ஏகப்பட்ட விருப்பங்கள் இருக்கின்றன. இதனால் பெரிய ரிஸ்க் எடுப்பது சவாலாக மாறியிருக்கிறது. இருந்தாலும், துணிச்சலான முடிவுகள்தான் ஒரு நடிகனுக்குச் சரியான அடையாளத்தைத் தரும்” எனப் பகிர்ந்திருக்கிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் 1989-ல் வெளியான ‘கீதாஞ்சலி’ திரைப்படம் இந்த மாதம் ஆகஸ்ட் 28 அன்று ரீ-ரிலீஸ் ஆகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.