கீழே விழுந்த கைப்பை; பைக்கை நிறுத்திய கணவன்; விரட்டிக் கொன்ற காதலன்; ஆந்திராவில் கொடூரம் | Wife signals lover to kill husband after dropping bag during bike ride to hilltop temple; lover chases and murders him

Spread the love

தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி அருகில் உள்ள சூளகிரியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஹாசினி (19). இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.

சம்பவத்தன்று ஆந்திரா மாநிலம் குடுப்பள்ளி மண்டலத்தில் உள்ள மல்லப்பா கொண்டா மலை உச்சியில் அமைந்துள்ள ஸ்ரீ மல்லேஸ்வர சுவாமி கோவிலுக்கு ஹாசினி, அவரது கணவர் ரமேஷ் மற்றும் மகளுடன் சென்றனர். மலையில் உள்ள கோயிலுக்குச் சென்றபோது நடுவழியில் எதிர்பாராத விதமாக ஹாசினியின் கைப்பை தவறி கீழே விழுந்தது. உடனே ரமேஷ் பைக்கை நிறுத்தினார்.

அந்நேரம் மலையில் மறைந்திருந்த சிலர் வந்து ரமேஷை வனப்பகுதிக்குள் விரட்டிச்சென்று கத்தியால் குத்திக்கொலை செய்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்கானிப்பு கேமரா காட்சிகள் ஆய்வுசெய்யப்பட்டது.

இதில் ஹாசினி கொலை நடந்த பிறகு அந்த இடத்தில் இருந்து இரண்டு பேருடன் பைக்கில் புறப்பட்டு சென்றது தெரியவந்தது. அதோடு அப்பகுதியில் செயல்பாட்டில் இருந்த மொபைல் போன்கள் குறித்த விபரங்களையும் சேகரித்தபோது இக்கொலையில் ஹாசினிக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், “‘ஹாசினிக்கு சிறுவயதிலிருந்து யுகந்தர் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். திருமணத்திற்குப் பிறகும் அவர்களது காதல் தொடர்ந்துள்ளது.

இதில் ரமேஷைக் கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டனர். இதற்காக மலைக்கோயிலுக்குச் செல்லலாம் என்று கூறி ரமேஷை ஹாசினி சம்மதிக்க வைத்துள்ளார். தம்பதியினர் தங்கள் மகளுடன் பயணம் செய்தபோது, ​​ஹாசினி தொலைபேசியில் யுகந்தருடன் அவர்களின் நேரடி இருப்பிடத்தைத் தொடர்ந்து பகிர்ந்து வந்ததார்.

இது தாக்குதல் நடத்தியவர்கள் அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க உதவியது. மலைப்பாதையில் உள்ள மூன்றாவது வளைவுப் பகுதியில் இந்தக் கொலைத் திட்டம் செயல்படுத்தப்படுத்த திட்டமிட்டு இருந்தனர். அங்கு ஹாசினி வேண்டுமென்றே தனது கைப்பையைக் கீழே போட்டுள்ளார். அதனால் ரமேஷ் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

அப்போது மறைந்திருந்த யுகந்தரும் அவரது கூட்டாளிகளும் வெளியே வந்து, ரமேஷை அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குள் சுமார் 100 மீட்டர் தூரம் துரத்திச் சென்று கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்துள்ளனர். அவர்களது மகள் அருகில் இருக்கும்போது இக்கொலை நடந்துள்ளது” என்று தெரிவித்தனர்.

ஹாசினியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் இந்த விசாரணையை மேற்கொண்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *