கும்பகோணம்: காதலிக்க மறுத்த பள்ளி ஆசிரியை; பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட கேரள ஜிம் பயிற்சியாளர் | Kumbakonam: Kerala gym trainer sets himself on fire after school teacher refuses his romantic advances.

Spread the love

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம், மதுர் பகுதியைச் சேர்ந்தவர் சுமன்ராஜ் (36). ஜிம்மில் பயிற்சியாளராக உள்ளார். சுமன்ராஜுக்குத் திருமணம் ஆகி ஹித்தாச்சி என்ற மனைவியும் 7 வயதில் பெண் குழந்தையும், ஒன்பது மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளன.

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம், மீட்பு புரி பகுதியைச் சேர்ந்தவர் நீத்து (25). சுமன்ராஜ் பயிற்சியாளராக இருந்த ஜிம்முக்கு வந்த நீத்துவிற்கும் சுமன்ராஜுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் தீ வைத்து கொண்ட நபர்

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் தீ வைத்து கொண்ட நபர்

இதனால் சுமன்ராஜ் மனைவி குழந்தைகளைப் பிரிந்து தமிழ்நாட்டிற்கு வந்து சென்னையில் ஜிம் பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார். நீத்து கும்பகோணம் அணைக்கரை அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக கடந்த மூன்று மாதங்களாகப் பணிபுரிந்து வருகிறார்.

சுமன்ராஜ் திருமணமானவர் என்பது தெரிந்த காரணத்தினால் நீத்து சுமன்ராஜிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். சுமன்ராஜ் நீத்துவிடம் தன்னைக் காதலிக்கவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று பலமுறை மிரட்டியும் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *