தவெக-வின் கும்பகோணம் மாநகரச் செயலாளர் முருகானந்தம். இவர் நேற்று இரவு கோடையான் தோட்டம் அருகே காரில் சென்றுள்ளார். கார் இருட்டான பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு டூவீலரில் வந்த மூன்று நபர்கள் காரை வழி மறித்து முருகானந்தத்தை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் முருகானந்தம் புகார் அளித்துள்ளார்.

அதில், அடையாளம் தெரிந்த, பெயர் தெரியாத மூன்று நபர்கள் தன்னை தாக்கியதாகவும், ஓட்டுநர் இருக்கை அருகே உள்ள கண்ணாடி உடைந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது முருகானந்தத்தின் கார் போலீஸ் ஸ்டேஷனில் உள்ளது. தாக்கியதில் முகம் மற்றும் நெஞ்சு வலிப்பதாக முருகானந்தம் கூறியதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.