குர்தாஸ்பூர் காவலர் கொலை: பொறுப்பேற்றதாகப் பயங்கரவாத அமைப்பு அறிவிப்பு|Two Men, One Bike, A Murder: CCTV Emerges in Punjab Cop Killing

Spread the love

சமீபத்தில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் தலைமைக் காவலர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலைக்குச் சற்று முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் அவரை அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

சுஜான்பூர் காவல் நிலையத்தில் வயர்லெஸ் ஆபரேட்டராகப் பணியாற்றி வந்தவர் வினோத் குமார் (42).

பயிற்சிக்காக சங்ரூர் சென்றிருந்த இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது சகோதரருக்கு போன் செய்து, மான்கவுர் பைபாஸ் பகுதியில் இருந்து தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.

சுட்டுக்கொலை

சுட்டுக்கொலை
சித்திரிப்புப் படம்

பாகிஸ்தான் பயங்கரவாதிகள்…

ஆனால், வினோத் குமாரின் சகோதரர் அங்குச் சென்று பார்த்தபோது அவரைக் காணவில்லை. இதையொட்டி, இவரைத் தீவிரமாகத் தேடிய நிலையில், பைபாஸ் அருகே தலையில் பலத்த காயங்களுடன் வினோத் குமார் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தச் சூழலில், பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் ‘தெஹ்ரீக்-இ-தலிபான் இந்துஸ்தான்’ என்ற பயங்கரவாத அமைப்பு, சமூக வலைத்தளங்களில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் இந்தக் கொலைக்குப் பொறுப்பேற்பதாகக் கூறியுள்ளது. மேலும், காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கும் அந்தப் போஸ்டரில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *