`குழந்தைங்க பசிக்கும், கல்விக்கும் முன்னாடி பயம் பெருசில்ல…’ – ஊக்கமூட்டும் கேப் ஓட்டுநர் நந்தினி

Spread the love

வாழ்க்கை நமக்குச் சவால்களைத் தரும்போது, அதைக் கண்டு அஞ்சி ஓடாமல், அந்தச் சவால்களையே ஏணியாக மாற்றி முன்னேறுபவர்கள் மிகச் சிலரே. அந்த வகையில், ஹைதராபாத் நகரின் பரபரப்பான சாலைகளில் தன்னுடைய மூன்று குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஓட்டுநராகப் பணியாற்றும் நந்தினி என்ற பெண்மணி, இன்று இணையதளங்களில் பலருக்கு உத்வேகம் அளிக்கும் நாயகியாக மாறியுள்ளார்.

ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த நந்தினி, ஒரு “சிங்கிள் மதர்’. வாழ்வாதாரத்திற்காகப் போராடிக்கொண்டிருந்த இவர், மூன்று குழந்தைகளுக்குச் சிறந்த கல்வியையும், பாதுகாப்பான வாழ்க்கையையும் வழங்க வேண்டும் என்ற ஒற்றை லட்சியத்துடன், ஹைதராபாத் நகரத்திற்கு இடம்பெயர்ந்தார். வேறு எந்த உதவியும் இல்லாத நிலையில், தனது ஓட்டுநர் திறமையையே ஆயுதமாக மாற்றிக்கொண்டு, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ‘உபெர்’ (Uber) ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் சுரேஷ் கொச்சட்டில் என்ற பயணி, நந்தினியின் காரில் பயணம் செய்தபோதுதான் இவரது கதை, பொதுவெளிக்கு வந்தது. நள்ளிரவிலும் அதிகாலையிலும் இடைவிடாது கார் ஓட்டும் நந்தினியின் கடின உழைப்பைக் கண்டு வியந்த சுரேஷ், அவரைப் பற்றிய புகைப்படத்தையும் கதையையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். ஆண்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் ஒரு துறையில், ஒரு பெண்ணாக இரவு நேரங்களிலும் தடையின்றிப் பணியாற்றுவது அத்தனை எளிதானது அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *