‘கூட்டுறவு சங்கங்களும் மதுக்கடைகளை திறக்கலாம் எனஅரசு ஆணை பிறப்பிக்க வேண்டிய தேவை என்ன?’ – அன்புமணி | Anbumani about GO pass Cooperative Societies to Open Liquor Shops

Spread the love

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை நடத்துவதில் முக்கிய மாற்றத்தை அரசு அறிவித்துள்ளது. டாஸ்மாக் நிறுவனம் இதுவரை நேரடியாக நடத்தி வந்த மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை, இனி அதன் முகவர்களாகச் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாகவும் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணையை உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை வெளியிட்டிருக்கிறது.

இந்நிலையில் கூட்டுறவு சங்கங்கள் மதுக்கடைகளை நடத்த அனுமதி வழங்குவது ஆபத்தானது. தனியார்மயம், மது வணிகம் அதிகரிக்கவும் வழி வகுக்கக்கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.

டாஸ்மாக்

டாஸ்மாக்
கோப்புப் படம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “தமிழ்நாட்டில் சில்லரை மது வணிகத்தை டாஸ்மாக் நிறுவனம் மட்டுமின்றி, கூட்டுறவு சங்கங்களும் நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கூட்டுறவு சங்கங்கள் விரும்பினால் டாஸ்மாக் நிறுவனத்திடம் அனுமதி பெற்று தேவைக்கு ஏற்ப மதுக்கடைகளைத் திறந்து கொள்ளலாம்;

அவ்வாறு திறக்கப்படும் மதுக்கடைகளின் விவரங்களை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவு ஆபத்தானது.

மது அத்தியாவசியமான பொருள் அல்ல. தமிழ்நாட்டில் தேவைக்கும் அதிகமாகவே மதுக்கடைகள் உள்ளன என்பதால், புதிய மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என்று சில நாள்களுக்கு முன்பு தான் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பளித்திருந்தது. அதற்குள்ளாக கூட்டுறவு சங்கங்களும் மதுக்கடைகளைத் திறக்கலாம் என்று தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டிய தேவை என்ன?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *