கேரள முன்னாள் முதல்வர் கே.கருணாகரனின் வாழ்க்கை வரலாறு: ஷார்ஜா புத்தக கண்காட்சியில் கோலாகல வெளியீடு | Former Kerala CM K. Karunakaran’s Biography Released at 45th Sharjah International Book Fair

Spread the love

International

oi-Shyamsundar I

ஷார்ஜா: கேரளாவின் முன்னாள் முதலமைச்சரும், இந்திய அரசியலில் முக்கிய தலைவராகத் திகழ்ந்தவருமான கே. கருணாகரனின் வாழ்க்கை வரலாற்று நூல், 45-வது ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியின் நிறைவு நாளில் எழுத்தாளர்கள் அரங்கில் வெளியிடப்பட்டது.

uae

புலம்பெயர் எழுத்தாளர் பிஜிலி அனீஷ் ராணி எழுதியுள்ள இந்தப் புத்தகத்தை ஹரிதம் புக்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விழாவில் இந்தியன் அசோசியேஷன் ஷார்ஜா தலைவர் கே. பாலகிருஷ்ணன் நூலின் முதல் பிரதியை வெளியிட, துபாய் விமான நிலைய பாதுகாப்புத் துறை மூத்த நிபுணர் ஜோஸ் லூக்கோஸ் கட்டுவிளையில் அதனைப் பெற்றுக்கொண்டார்.

uae

நான்கு முறை கேரள முதலமைச்சராகப் பணியாற்றிய கே. கருணாகரனின் அரசியல் பயணம், நிர்வாகத் திறமை, மக்கள் நலப் பணிகள் மற்றும் முக்கிய வரலாற்று நிகழ்வுகளை இன்றைய இளைஞர்கள் எளிதாகத் தெரிந்துகொள்ளும் வகையில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

uae

இந்த நிகழ்ச்சியில் ஐஓசி ஒருங்கிணைப்பாளர் மகாதேவன் வாழசேரி, வழக்கறிஞர் ஒய்.ஏ. ரஹீம் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர். மேலும், கண்காட்சிக்கு வந்திருந்த கேரள முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா, திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ-க்கள் பழகுளம் மது, கே. ஜெயந்த், ரெஜி சேரியன் மற்றும் முன்னாள் எம்.பி. டி.என். பிரதாபன் ஆகியோருக்கும் நூலாசிரியர் புத்தகத்தின் பிரதிகளை நேரில் வழங்கினார். கேரள அரசியல் வரலாற்றை வருங்காலத் தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் சிறந்த ஆவணமாக இந்த நூல் அமைந்துள்ளது.

uae

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *