கை, கால், வாய் நோய்: குழந்தைகளிடையே அதிகரிக்கும் HFMD பாதிப்பு – பெற்றோர் கவனிக்க வேண்டியது என்ன? | Hand, Foot and Mouth Disease (HFMD) in Children: Symptoms and Precautions for Parents

Spread the love

குழந்தைகளை குறிவைக்கும் வைரஸ் தொற்று – பள்ளிகள், Day-care மையங்களில் அதிக கவனம் தேவை

குழந்தைகளிடையே வேகமாகப் பரவக்கூடிய வைரஸ் தொற்றுகளில் ஒன்றான கை, கால், வாய் நோய் (Hand, Foot, and Mouth Disease – HFMD) தொடர்பான பாதிப்புகள் குறித்து தற்போது கவனம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் குறிப்பாக புனே நகரில் 2026 செப்டம்பர் மாதத்தில் 2 முதல் 7 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே HFMD பாதிப்புகள் அதிகரித்து வருவதாக குழந்தை நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய குழந்தை நல மருத்துவர் வை. பாலமுருகன், பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

பள்ளிகள், குழந்தை காப்பகங்கள் மற்றும் குழந்தைகள் அதிகமாக ஒன்றுகூடும் இடங்களில் நெருங்கிய தொடர்பு காரணமாக இந்தப் பரவல் அதிகரிக்கலாம் எனக் கூறுகிறார்.

மருத்துவர் வை. பாலமுருகன்

மருத்துவர் வை. பாலமுருகன்

HFMD என்றால் என்ன?

“HFMD என்பது Enterovirus குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ்களால் ஏற்படும் தொற்று நோய். இது குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் அதிகமாகக் காணப்படுகிறது என்றாலும், பெரிய குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் ஏற்படலாம். பொதுவாக காய்ச்சல், தொண்டை வலி, வாய்ப்புண்கள் மற்றும் கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் தோல் தடிப்புகள் ஏற்படுவது இதன் முக்கிய அறிகுறிகளாகும்.

முக்கியமாக, HFMD-ஐ கால்நடைகளில் காணப்படும் Foot-and-Mouth Disease உடன் குழப்பக் கூடாது. இரண்டும் முற்றிலும் வேறுபட்ட நோய்கள். HFMD மனிதர்களை பாதிக்கிறது; கால்நடைகளின் Foot-and-Mouth Disease மனிதர்களுக்கு ஏற்படாது.

எந்த வைரஸ் காரணம்?

HFMD-க்கு ஒரே ஒரு வைரஸ் மட்டுமே காரணம் அல்ல. பல்வேறு Enterovirus வகைகள் இதை ஏற்படுத்தலாம்.

முக்கியமானவை:

* Coxsackievirus A16

* Coxsackievirus A6 (CV-A6)

* Enterovirus A71 (EV-A71)

CDC-யின் தகவல்படி, CV-A6 HFMD-ஐ ஏற்படுத்தக்கூடிய முக்கிய வைரஸ்களில் ஒன்று. EV-A71 குறிப்பாக கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் HFMD மற்றும் சில நேரங்களில் தீவிரமான நரம்பியல் பாதிப்புகளுடன் தொடர்புடையதாகக் குறிப்பிடப்படுகிறது.

அறிகுறிகள் என்ன?

HFMD-ன் ஆரம்ப அறிகுறிகள் சாதாரண வைரஸ் காய்ச்சலைப் போலவே இருக்கலாம்.

ஆரம்ப அறிகுறிகள்:

* காய்ச்சல்

* தொண்டை வலி

* பசியின்மை

* உடல் சோர்வு

* குழந்தை வழக்கத்தைவிட எரிச்சலாக இருப்பது

* நாக்கு, ஈறுகள் மற்றும் வாயின் உட்பகுதிகளில் வலி தரும் சிறிய சிவப்பு புள்ளிகள் அல்லது கொப்புளங்கள் உருவாகலாம்.

கைகள் மற்றும் கால்களில்:

உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில் சிவப்பு தடிப்புகள் அல்லது சிறிய கொப்புளங்கள் தோன்றலாம்.

மற்ற பகுதிகளில்:

பிட்டம், கால்கள் மற்றும் கைகளிலும் தடிப்புகள் தோன்றலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *