கொளத்தூர் தொகுதி காலி; சட்டப்பேரவைச் செயலகம் அறிவிப்பு – இடைத்தேர்தலை எதிர்நோக்கும் 6 தொகுதிகள்| kolathur constituency vacant assembly secretariat announcement

Spread the love

தவெக கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ். பாபு (75) காலமானதைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைவரும் அப்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொளத்தூர் தொகுதியைக் கைப்பற்றி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியவர் வி.எஸ். பாபு.

தவெக வி.எஸ் பாபு

தவெக வி.எஸ் பாபு

கடந்த சில மாதங்களாகச் சுவாசக் கோளாறு மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த நவம்பர் 19-ம் தேதி மாரடைப்பால் அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட விதிகளின்படி கொளத்தூர் தொகுதி காலியானதாகச் சட்டப்பேரவைச் செயலகம் தற்போது அறிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *