நாடாளுமன்றத்தில் “பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா–2026” மீதான விவாதத்தின் போது பேசிய பிரியங்கா காந்தி, தேசியத் தேர்வு முகமை (NTA) சீர்திருத்தத்திற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவை விமர்சித்தார். அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள முன்னாள் உளவுத்துறை அதிகாரி தபன் தேகா, தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னணி தொழிலதிபர் நந்தன் நிலேகனி மற்றும் ஐஐடி இயக்குநர் காமகோடி ஆகியோரை குறிப்பிட்டு, கல்வித்துறையைப் பற்றி இவர்களுக்கு என்ன அனுபவம் உள்ளது என கேள்வி எழுப்பியதோடு, காமகோடியை “கோமிய நிபுணர்” என்றும் குறிப்பிட்டார். மாட்டுக் கோமியம் உடல்நலப் பிரச்சனைகளை தீர்க்கும் எனக் கூறி சர்ச்சையில் சிக்கியவர் தான் இந்த காமகோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள 215 கல்வியாளர்கள், காமகோடி இந்தியாவின் முன்னணி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றை வழிநடத்தும் கல்வியாளர் என்றும், அவரது கருத்துகளுடன் உடன்பாடு இல்லாவிட்டாலும் அறிவியல் ரீதியாக விவாதிக்க வேண்டும். தனிப்பட்ட முத்திரை குத்தி விமர்சிப்பது ஏற்க முடியாதது என்றும் தெரிவித்துள்ளனர்.
ப்ரியங்கா காந்தியின் இந்த கருத்து வலதுசாரிகள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து மன்னிப்பு கேட்பாரா ப்ரியங்கா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

