கோவாவில் கல்யாணம்… மினிமம் அழைப்பு! குஷ்பு – சுந்தர்.சி தம்பதிக்கு மருமகன் ஆகும் ஷ்ரவன் யார்? | Who is shravan, who is going to knot Kushboo sundar c daughter in goa

Spread the love

37 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி நடித்த `தர்மத்தின் தலைவன்” படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக அறிமுகமானார், குஷ்பு. அப்போது, “தம்பி சைனா பொம்மை மாதிரி செவப்பா ஒரு பொண்ணு நடிக்க வந்திருக்கு. இந்த சினிமா உலகத்துல எப்படி போராடி ஜெயிக்கப் போவுதோ தெரியலப்பா ” என்று ஆதங்கப்பட்டார் மனோரமா ஆச்சி.

அதன்பிறகு, “வருஷம் 16 “, ” சின்னத்தம்பி ” என்று கோலிவுட்டில் உச்சத்துக்கு போனார். ஒரு கட்டத்தில் குஷ்புவுக்கு கோயில் கட்டி, கும்பாபிஷேகம் நடத்தும் நிலைக்கு ரசிகர்களை பெற்றார், . அதன்பிறகு அரசியலிலும் இறங்கினார். முதலில் தி. மு. க அடுத்து காங்கிரஸ் இப்போது பா. ஜ. க என்று ரவுண்டு கட்டிக்கொண்டு இருக்கிறார்.

இயக்குநர் மணிவண்ணன் அவர்களிடம் உதவி டைரக்டராக வேலை பார்த்தார், சுந்தர்.சி . ரஜினியுடன் அருணாச்சலம், கமலுடன் அன்பே சிவம் , அஜித்துடன் உன்னைத் தேடி படங்களை இயக்கி முன்னணி டைரக்டரானார். இவருடன் சம காலத்தில் இருந்த இயக்குநர்களில் பலர் இப்போது சினிமாவிலேயே இல்லை. இவர் மட்டுமே இப்போதும் அரண்மனை, கலகலப்புனு என்று இப்போதும் லைம் லைட்டில் இருக்கிறார்.

எந்தவித ஈகோ எதுவும் இல்லாமல் தன்னைவிட ஜூனியர் டைரக்டரானா ஆர். ஜே. பாலாஜி இயக்கிய முக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது எடுத்துக் கொண்டு இருக்கிறார். முதன் முதலாக சுந்தர் . சி இயக்கிய `முறை மாமன்’ படத்தில் ஜெயராமனுக்கு ஜோடியாக நடித்தார், குஷ்பு.

அப்போது ஏற்பட்ட நட்பு ஒரு கட்டத்தில் காதலாகி, கசிந்துருகி கல்யாணத்தில் முடிந்தது. அவந்திகா, ஆனந்திதா என்று இரண்டு பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார், குஷ்பு.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *