சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். இன்றும் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் தனி கவனத்தைப் பெற்று வருகிறது.
சுப்ரமணியபுரத்துக்குப் பின் ’ஈசன்’ படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார்.
வெற்றி, தோல்வியென சென்ற அவர் நடிப்பு வாழ்க்கையில் இறுதியாக வெளியான ‘அயோத்தி’ ’கருடன்’ ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.
‘உடன்பிறப்பே’ படத்தை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்த ‘நந்தன்’ திரைப்படம் படப்பிடிப்பு முடிந்த பின்பும் நீண்ட நாள்களாகத் திரைக்கு வராமல் இருக்கிறது.
இப்படம் தொடர்பான அப்டேட்டை சசிகுமார் வெளியிட்டுள்ளார். அதில் நந்தன் திரைப்படம் செப்.20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இரா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சுருதி பெரியசாமி நாயகியாக நடித்துள்ளார்.
இது குறித்து நடிகர் சூரி தனது எக்ஸ் பக்கத்தில், “படம் பார்த்து பல மணி நேரங்கள் ஆகின்றன. நந்தன் தந்த பிரமிப்பு இன்னும் அகலவில்லை! அன்பு இரா. சரவணனன் அண்ணனுக்கும் சசிகுமார் அண்ணனுக்கும் ஜிப்ரான் சகோதரருக்கும் நந்தன் பட குழுவினர்க்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
நடிகர் சூரியுடன் கருடன் படத்தில் சசிகுமார் இணைந்து நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் சூரியின் கொட்டுக்காளி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றன.
படம் பார்த்து பல மணி நேரங்கள் ஆகிறது – நந்தன் தந்த பிரமிப்பு இன்னும் அகலவில்லை!
அன்பு இரா. @erasaravanan அண்ணனுக்கும், @SasikumarDir அண்ணனுக்கும், @GhibranVaibodha brother. நந்தன் குழுவினர்க்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் #Nandhan pic.twitter.com/HIulDkKSjW
— Actor Soori (@sooriofficial) September 3, 2024