விசாகப்பட்டினம்:
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், அனகா பள்ளியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண் கடந்த சில மாதங்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி தீரவில்லை.
கருக்கலைப்பு
இதையடுத்து அந்த பெண் விசாகப்பட்டினத்தில் உள்ள கிங் ஜார்ஜ் ஆஸ்பத்திரிக்கு(கே.ஜி.எச்) வந்தார். அவருக்கு அல்ட்ரா சவுண்ட் மற்றும் ஸ்கேன் செய்து வயிற்று பகுதியில் பார்த்த போது லித்தோபீடியான் எனப்படும் கருக்குழந்தையின் எலும்புகள் இருப்பது தெரிந்தது.
அந்த இளம் பெண்ணுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர்.கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்பம் தரித்து உள்ளார். இதனால் 3-வது குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத அவர் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டு உள்ளார். ஆனால் இளம்பெண்ணுக்கு பாதி அளவு கரு கலைந்தது. 24 மாதம் அதாவது 6 மாத கரு முழுமையாக கலையாமல் அதன் எலும்புகள் அப்படியே இருந்து உள்ளன.
கருவின் எலும்புகள்
ஆனால் கலைந்து விட்டதாக நினைத்து இளம்பெண் இருந்து உள்ளார். மேலும் அவருக்கு எந்த வித வலி, மற்றும் வேறு எந்த உபாதைகளும் இல்லததால் இதுபற்றி அவருக்கு தெரியவில்லை.
3 வருடங்களுக்கு பின்னர் வயிற்று வலி வந்த பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்த பிறகுதான் கருவின் எலும்புகள் வயிற்றில் இருப்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த வாரம் டாக்டர்கள் குழுவினர் மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை செய்து இளம் பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையின் எலும்புக்கூடை அகற்றினர்.தற்போது இளம் பெண் நலமுடன் உள்ளார்.
எடியூரப்பா மீது புகார் அளித்த பெண் மரணம் குறித்து விசாரணை?
இதுகுறித்து டாக்டர்கள் கூறும்போது, லித்தோபீடியன் என்பது கிரேக்க வார்த்தையான லித்தோஸ்(கல்) மற்றும் பேடியன்(குழந்தை) ஆகியவற்றில் இருந்து வந்து உள்ளது. இது போன்ற சம்பவம் அரிய நிகழ்பு ஆகும். இது 1 சதவீதத்துக்கும் குறைவாக கர்ப்பகாலங்களில் ஏற்படுகிறது.அனைத்து கர்ப்பங்களிலும் 0.0054% மட்டுமே ஏற்படுகிறது.
2015 ஆம் ஆண்டில், எஸ்டெலா மெலெண்டெஸ் என்ற 92 வயதான தென் அமெரிக்கப் பெண், 60 ஆண்டுகளுக்கும் மேலாக சுமந்த இது போன்ற கருவின் மிச்சம் அகற்றப்பட்டது. அவரது வயது மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் இருந்தபோதிலும் இந்த பாதிப்பு ஆரோக்கியத்திற்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஒரு லித்தோபீடியன் உருவாக, கரு குறைந்தது 3 மாதங்கள் உயிர்வாழ வேண்டும், ஏனெனில் எலும்புளில் சதைப்பிடிக்கத் தொடங்க வேண்டும். கரு இறந்துவிட்டால் அது காலப்போக்கில் படிப்படியாக அதன் எலும்புகள் சுண்ணாம்பு போன்று ஆகி விடும்.இதுதான் தற்போது பெண்ணின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்டு உள்ளது என்றார்.