இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று (ஜூன்.22) தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியிருக்கிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போது சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
விவாதத்தின்போது மேகதாது அணை தீர்மானம் பற்றி உரிமை மீறல் பிரச்னை எழுப்பி பேசக் கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஆவேசமாக கூச்சலிட்டு சபாநாயகருடன் வாதம் செய்தார். பின்னர் சட்டமன்றத்தில் பேச அனுமதிக்கவில்லை எனக் கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருக்கின்றனர்.

இதில் குறிப்பான விஷயம் என்னவென்றால் சி.வி சண்முகம் சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை. மேலும் எடப்பாடி பழனிசாமி தரப்பு வெளிநடப்பு செய்திருக்கும் நிலையில் எஸ்.பி வேலுமணி, நத்தம் விஸ்நாதன், பழனி தொகுதி எம்.எல்.ஏ கே.ரவி மனோகரன், சங்கராபுரம் எம்.எல்.ஏ ராகேஷ் ஆகியோர் வெளிநடப்பு செய்யவில்லை. மீண்டும் அதிமுகவிற்குள் புகைச்சலா? என்ற விவாதத்தை இந்த சம்பவம் ஏற்படுத்தி இருக்கிறது.