சத்தியபாமாவுக்காக களத்தில் இறங்கிய விஜய்… தாராபுரத்தில் குவிந்த கூட்டம்! – Kumudam

Spread the love

அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் இன்று (அக்.4) தாராபுரத்தில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தவெக சார்பில் தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் சத்தியபாமாவை ஆதரித்து விஜய் வாக்கு சேகரிக்கிறார். இதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த அவர், அங்கிருந்து தாராபுரத்துக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

விஜய்யின் பிரச்சாரத்தை முன்னிட்டு கோவை விமான நிலையம் மற்றும் அவர் செல்லும் வழித்தடங்களில் போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் தற்காலிகமாக ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தாராபுரத்தில் விஜய்க்கு வரவேற்பு அளிக்க தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டுள்ளனர். பல்வேறு இடங்களில் ஆரத்தி எடுத்தும், மலர்கள் தூவியும், கட்சிக் கொடிகளை வழங்கியும் அவருக்கு வரவேற்பு அளித்து வருகின்றனர்.

தாராபுரத்தில் விஜய் மேற்கொள்ளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் சத்தியபாமாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார். இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், விஜய்யின் பிரச்சாரம் அரசியல் கட்சிகளிடையே கவனம் பெற்றுள்ளது

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *