சந்திரசேகரன் விலகல்: டாடா பங்குகள் இனி எப்படி இருக்கும்?|Chandrasekaran Out, Tata Stocks Down: What Happens Next?

Spread the love

ஆனால், அதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். டாடா குழுமம் போன்ற தொழில்முறை நிறுவனங்களில், இந்த உடனடிப் பாதிப்பு அல்லது பதற்றம் அதிகபட்சமாக ஒரு வாரத்திற்கு மட்டுமே நீடிக்கும்.

அடுத்த கட்ட எதிர்வினை எப்போது வரும் என்றால், பங்குச்சந்தைக்குப் புதிய தலைவர் யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்போதுதான்.

அவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவரா, டாடா சன்ஸ் அமைப்பிலேயே 25 ஆண்டுகள் இருந்தவரா, அல்லது டாடா ஸ்டீலில் இருந்து வருகிறாரா என்பதைப் பொறுத்தே சந்தையில் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும்.

N சந்திரசேகரன் - ரத்தன் டாடா

N சந்திரசேகரன் – ரத்தன் டாடா

முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, இது கடந்துபோகும் ஒரு காலகட்டம் மட்டுமே. சந்திரசேகரன் காலகட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. அவர் தனது பதவிக்காலத்தில் சந்தை மதிப்பை 3 மடங்கு உயர்த்தியுள்ளார்.

அதேநேரம், சில நஷ்டத்தில் இயங்கும் வணிகங்களிலும் முதலீடு செய்துள்ளார் (உதாரணத்திற்கு Blinkit போன்ற முதலீடுகள் உடனடி லாபத்தைத் தராமல் போகலாம்). இவையெல்லாம் வியாபாரத்தில் நடக்கும் சாதாரண விஷயங்கள்தான்.

இப்போது நாம் பேசும் இந்த நேரத்தில், பங்குச்சந்தையில் டாடா நிறுவனப் பங்குகள் பெரிய அளவிலான சரிவையோ வீழ்ச்சியையோ சந்திக்கவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *