சந்திராஷ்டம பரிகாரம் என்ன?
சந்திராஷ்டம நாளில் எந்த ஒரு செயலையும் ஆரம்பிக்கும் முன் குலதெய்வத்தையும், முன்னோர்களையும், இஷ்டதெய்வத்தையும் வணங்கிவிட்டு ஆரம்பிப்பது நன்மை தரும். இப்படிச் செய்தால் காரியத்துக்கு எந்தத் தடையும் வராது.
சந்திராஷ்டம நாள்களில் மன அமைதியும் நன்மையும் நடைபெற அம்பிகையின் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை சொல்லுங்கள்.
`யா தேவி ஸர்வ பூதேஷு சாந்தி ரூபேண ஸம்ஸ்திதா நமஸ் தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:’
கருத்து: எல்லாம்வல்ல பராசக்தியானவள் அனைத்து உயிர்களிலும், இயற்கையிலும் அமைதியின் வடிவாக விளங்குகிறாள். அந்த அன்னையை வணங்குகிறேன்.
இப்படிச் சொல்லி வழிபட்டால், மனச் சஞ்சலங்கள் நீங்கும்; சந்தோஷம் பெருகும்.
அனுகூல சந்திராஷ்டம்
ஜோதிட நூல்கள் அனுகூல சந்திராஷ்டமம் குறித்தும் விவரிக் கின்றன. சந்திரன் நம்முடைய ராசிக்கு எட்டில் சந்திரன் இரண்டேகால் நாள் உலவுவார். அதில் சந்திரன் ஜன்ம நட்சத்திரத்துக்கு அனுகூலமான நட்சத்திரத்தில் உலவும்போது பாதிப்பு நிச்சயம் குறைவாகவே இருக்கும். இதை அனுகூல சந்திராஷ்டம நட்சத்திரங்கள் என்கிறார்கள் ஜோதிடர்கள்.
எந்தெந்த நட்சத்திரத்துக்கு அனுகூல சந்திராஷ்டம நட்சத்திரங்கள் எவை என்ற விவரம் இங்கே உங்களுக்காக…
ஜன்ம நட்சத்திரம் – அனுகூல சந்திராஷ்டம நட்சத்திரங்கள்
அசுவினி — அனுஷம், கேட்டை
பரணி – கேட்டை, விசாகம்
கார்த்திகை — அனுஷம்
ரோகிணி — பூராடம், உத்திராடம்
மிருகசீரிஷம் — உத்திராடம், திருவோணம்
திருவாதிரை — திருவோணம், அவிட்டம்
புனர்பூசம்– அவிட்டம், சதயம்
பூசம் — சதயம், பூரட்டாதி
ஆயில்யம் — அவிட்டம், பூரட்டாதி்்
மகம் — உத்திரட்டாதி, ரேவதி
பூரம் — பூரட்டாதி, ரேவதி
உத்திரம் — அசுவினி, பரணி
அஸ்தம் — பரணி, கார்த்திகை
சித்திரை — கார்த்திகை, ரோகிணி
சுவாதி — ரோகிணி, மிருகசீரிஷம்
விசாகம் — மிருகசீரிஷம், திருவாதிரை
அனுஷம் — திருவாதிரை, புனர்பூசம்
கேட்டை — மிருகசீரிஷம், புனர்பூசம்
மூலம் — பூசம், ஆயில்யம்
பூராடம் — புனர்பூசம், ஆயில்யம்
உத்திராடம் — மகம், பூரம்
திருவோணம் — பூரம், உத்திரம்
அவிட்டம் — உத்திரம், அஸ்தம்
சதயம் — அஸ்தம், சித்திரை
பூரட்டாதி — சித்திரை, சுவாதி
உத்திரட்டாதி — சுவாதி, விசாகம்
ரேவதி — சித்திரை, விசாகம்