“காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’, ‘மாரி’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் வெப் சீரிஸ் ‘லவ்’.
இதில் அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த சீரிஸை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்திருக்கிறார்.
அக்.2 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் இந்த சீரிஸ் வெளியானது. இந்த சீரிஸ் தொடர்பான புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ்வர்யா லக்ஷ்மி கலந்துகொண்ருந்தார்.

அப்போது அவரிடம் சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த அவர், ” சமூக வலைதளங்களில் இருந்து விலகிய பிறகு எனக்கு மன அமைதி கிடைத்திருக்கிறது. தேவையில்லாத மன அழுத்தங்களில் மற்றும் ஒப்பீடுகளில் இருந்து விடுபட்ட உணர்வு கிடைத்திருக்கிறது.
சமூக வலைதளப் பயன்பாட்டை குறைத்ததால் எனது சொந்த வேலைகள் மற்றும் கலைப் பயணத்தில் முழு கவனத்தையும் செலுத்த முடிகிறது. என் வாழ்க்கையில் நான் தற்போது இருக்கும் இந்த இடத்தை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியிருக்கிறார்.