” சமூக வலைத்தளங்கள் இல்லாமல் ஒரு திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமான விஷயம்” – பரிதாபங்கள் கோபி | “Soul Of The Film Belongs To Pari Elavazhagan” – Parithabangal Gopi On Anbe Diana

Spread the love

இன்றைய காலத்தில் சமூக வலைத்தளங்கள் இல்லாமல் ஒரு திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் கடினமான விஷயம். இந்தப் படத்தின் வெற்றிக்குத் தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷின் பங்களிப்பு மிகப்பெரியது.

ஒரு நல்ல படத்தைத் தயாரிப்பது ஒரு கலை என்றால், அதைச் சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது பெரிய கலை. ‘குட்நைட்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற படங்களை அவர் மக்களிடம் கொண்டு சென்ற விதத்தை நான் பார்த்திருக்கிறேன்.

அதே அர்ப்பணிப்புடன் ‘அன்பே டயானா’ திரைப்படத்தையும் மக்களிடம் கொண்டு சென்றுள்ளார். அதற்காக அவருக்கு என் பாராட்டுகள். இந்தப் படத்தில் நான் நடித்திருந்தாலும், இந்த வெற்றியின் முழு பாராட்டும் இயக்குநர் பாரி இளவழகனுக்கே சேர வேண்டும்.

கோபி - பாரி

கோபி – பாரி

அவர் எழுதிய கதையையும், உருவாக்கிய கதாபாத்திரத்தையும் நான் அவர் சொன்னபடி திரையில் கொண்டு வர முயற்சித்தேன். எங்களுக்கு யூடியூப் ஒரு விசிடிங் கார்டு போல இருக்கிறது. ஆனால், நேரடியாக சினிமாவுக்கு வருவது எளிதான பயணம் அல்ல.

அதைவிட, இயக்குநராகத் தன்னை நிரூபிப்பது இன்னும் பெரிய சவால். அந்த சவாலை முழு அர்ப்பணிப்புடனும், சினிமா மீதான காதலுடனும் எதிர்கொண்டு வெற்றி பெற்றிருக்கும் பாரி இளவழகனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்தப் படத்தின் மூலம் சினிமாவை அணுகும் விதம், கதாபாத்திரத்தைப் புரிந்துகொள்ளும் முறை என பல விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். இந்த அனுபவம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது” எனப் பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *