சரிவை நோக்கி நகர்கிறதா ‘வங்காளப் புலி’ மம்தாவின் இரும்புக்கோட்டை? – உட்கட்சி எரிமலை வெடித்தது எங்கே? | where did mamata banerjee losing her hand in party

Spread the love

அசைக்க முடியாத சக்தியாக இருந்த திரிணாமுல் காங்கிரஸில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவுக்கு, அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் கட்சி சந்தித்த எதிர்பாராத பெரும் தோல்வியே பிரதான காரணமாகும். இந்தத் தோல்வி கட்சிக்குள் நீண்ட நாட்களாகப் புகைந்து கொண்டிருந்த அதிருப்தியை எரிமலையாக வெடிக்கச் செய்துள்ளது.

கட்சிக்குள் எழுந்துள்ள முக்கியக் குற்றச்சாட்டுகள்:

தன்னிச்சையான போக்கு: மன்மதா பானர்ஜி கட்சியைத் தனிநபராக, தன்னிச்சையாக நடத்துகிறார் என்றும், மூத்த தலைவர்களுக்கு  உரிய மதிப்பு தருவதில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

வாரிசு அரசியல் அதிருப்தி: மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜிக்குக் கட்சியில் அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுவது, ரத்தம் சிந்தி கட்சியை வளர்த்த சீனியர் தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கள் உழைப்பில் உருவான கட்சி ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் கைக்குள் போவதாகக் கூறி, 50-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் மம்தாவின் தலைமைக்கு எதிராகப் பகிரங்கமாகப் போர்க்கொடி தூக்கியுள்ளதால் கட்சி தற்போது இரண்டாக உடையும் விளிம்பில் நிற்கிறது.

அபிஷேக்குடன் மம்தா பானர்ஜி

அபிஷேக்குடன் மம்தா பானர்ஜி

பிராந்தியக் கட்சிகளை வலுவிழக்கச் செய்யும் பா.ஜ.க-வின் உத்திகளுக்குள் திரிணாமுல் காங்கிரஸ் சிக்கியுள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் ஆணித்தரமாகக் குறிப்பிடுகின்றனர். மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் என்.சி.பி ஆகிய கட்சிகளுக்குள் நிலவிய வாரிசு அரசியல் மற்றும் உள்கட்சிப் பூசல்களைப் பயன்படுத்தி கட்சிகளை உடைத்த அதே ஃபார்முலாவைத்தான் பா.ஜ.க தற்போது மேற்கு வங்கத்திலும் கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்குப் பின்னால் பா.ஜ.க-வின் மறைமுக ஆதரவு இருப்பதாகப் பேசப்படும் நிலையில், தேர்தல் தோல்வியால் துவண்டு போயிருக்கும் டிஎம்சி-யை இந்த உள்கட்சிப் பூசல் மூலமே மொத்தமாகக் காலி செய்துவிட்டு, அடுத்த முறை ஆட்சியைப் பிடிப்பதற்கான கச்சிதமான ‘ஸ்கெட்ச்’ போட்டு பா.ஜ.க வேலை செய்து வருகிறது.

ஒருவேளை அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மம்தாவின் தலைமையை முழுமையாகப் புறக்கணித்தால், அது தேசிய அரசியலில் இரண்டு முக்கியப் பாதிப்புகளை ஏற்படுத்தும்

திரிணாமுல் காங்கிரஸ் என்ற கட்சியின் ஒட்டுமொத்த பிராண்ட் மதிப்பே மம்தா பானர்ஜி மட்டும்தான். அவர் ஓரங்கட்டப்பட்டால் அந்த கட்சி சிதறிப்போய் தன் முகவரியை இழக்கும். தேசிய அளவில் பா.ஜ.க-வை மிக ஆக்ரோஷமாக எதிர்க்கும் முக்கிய ஆளுமைகளில் மம்தாவும் ஒருவர். மேற்கு வங்கத்தில் அவருக்கு ஏற்படும் பின்னடைவு, ‘இந்தியா’ கூட்டணியின் ஒட்டுமொத்த பலத்தைக் குறைப்பதோடு, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க பா.ஜ.க-விற்கு மேலும் சாதகமாக அமைந்துவிடும்.

போராட்டங்களாலேயே தனது அரசியல் பேரரசை உருவாக்கிய மம்தா பானர்ஜிக்கு, தற்போது அவரது சொந்தக் கட்சிக்காரர்களே கொடுத்துள்ள இந்த நெருக்கடி, அவரது அரசியல் வாழ்வின் மிகக் கடுமையான சோதனைக் காலகட்டமாகும். இந்த இக்கட்டான சூழ்நிலையைத் தன் அரசியல் சாணக்கியத்தனத்தால் ‘வங்காளப் புலி’ மம்தா முறியடிப்பாரா, அல்லது பா.ஜ.க-வின் உத்திகளுக்குப் பலியாகப் போகிறாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *